கண்ணதாசன் பாடல்களில் குறிப்பிடத்தக்க தனித்துவங்கள் நிறைந்தே காணப்படும். அதில் சொல் சுவை , பொருள் சுவையுடன் தனி நடை அழகு நயமுடன் பின்னப்பட்டிருக்கும். ரசிக்கப்படும் ரசனை கேள்வியும் பதிலுமான பாடல்களிலும் சற்று அதிகமாகவே காணப்படும். இருவர் உள்ளம் படத்தில் 'நதி எங்கே போகிறது ..கடலைத்தேடி.
நாள் எங்கே போகிறது ..பொழுதை த்தேடி.
நிலவெங்கே போகிறது .. மலரைதேடி
நினைவெங்கே போகிறது .. உறவை தேடி .. என்று முடிப்பார்... அடுத்து . சொல்லியாயிற்று , அடுத்துஎன்ன என்பது போல் ,
அழகு சிரிக்கிறது ...ஆசை துடிக்கிறது
பழக நினைக்கிறது ....பக்கம் வருகின்றது ... என்று சொல்லி வருவார். இதுவா அதுவா என்ற கேள்விக்கு அந்த கேள்வி ஒத்த வரிகளையே பதிலாகவும் காண்பிக்கும் ஜாலம் அவரிடம் உண்டு.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா....[கேள்வி]
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததும் நிலவு வந்ததா ..[பதில்] .. பார்த்தால் பசிதீரும் .........இப்படியே பாடல் போவது ஒரு சுவைதானே. பிறகு இன்னும், சொல்லும் உண்மையை எதிர்மறை பொருள் கொண்டே உணர்த்துவது போல் பாடல் வடிப்பது கைவந்த கலை.
பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா ...... ஆனந்த ஜோதியில். மற்றும் முரண்பாடான பொருளையும் தெளிவாக வைப்பார்.
நினைக்க தெரிந்தா மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா ... ஆனந்த ஜோதியில். இரட்டை அர்த்தம் சிலேடை நயம் அவர் பாடலில் காணலாம். 'அத்திக்காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே ,இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ.' .....பலேபாண்டியாவில் இது அவரின் இலக்கிய ரசனைக்கும் பொருந்தும். தத்துவம் தலை தூக்கி நிற்கும் அவரிடம்.
...வாழ்க்கை என்பது வியாபாரம்
ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.. பாலும்பழத்தில். அவள் ஒரு தொடர்கதையில், 'கள்ளிக்கேது முள்ளில் வேலி ..போடி தங்கச்சி , காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ... தன் நிலைப்பாட்டை அழகுபட உரைப்பார். அபூர்வராகங்களில் .....'அதிசய ராகம் ஆனந்த ராகம் ..', ' கேள்வியின் நாயகனே ...'எழுத, பாலசந்தர் அந்த கதைக்கு இவர் ஒருத்தராலே இப்படி ஒரு அருமையான பாடல் வடிக்க முடிந்தது என்று புளகாங்கிதம் அடைந்தது யாவரும் அறிந்ததே.http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DH5nFSVMxK20&h=XAQFmLJ42
கோதைதனபாலன்

No comments:
Post a Comment