Search This Blog

Thursday, February 16, 2012

சுசிலாவின் குரல் மேன்மை

சுசிலாவின் குரல் மேன்மைபற்றி   சொல்லும் போது எம்.எஸ்.வியிடம்அவர் பெற்ற பயிற்சிகளை குறிப்பிடாமல்   இருக்க முடியாது.  மிசியம்மாவில்   'அறியாப் பருவமடா..என்ற பாடல் அடுத்து வந்த பாடல்களை    கவனித்தால் இது நமக்கு புரியும். ஆரம்ப காலத்தில் தெலுங்கில் எழுதி பாடி வந்தவர்.பின்னர்   எம்.எஸ்.வியிடம்அவர்   பெற்ற பயிற்சியின் விளைவு நல்ல உச்சரிப்புடனும்,பாவங்களுடனும் பாடிவந்த  உன்னத பாடகியானார். அவர். தமிழில்  சிர்காழியுடன்  ஆரம்பத்தில் அவர் பாடிய  பாடல்கள்  இன்றும்  அமுதகானங்களாகவே   உள்ளன.  வீரக்கனல் படத்தில் ,'தங்கக்கிளியே மொழி பேசு.....,' சித்திரமே    சித்திரமே   சிரிக்கக்கூடாதா.. ,'    ஒ வண்டுனாடாத சோலையில் அமர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...,  சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ..'  நல்லவன் வாழ்வான் படத்தில் காதல் பாடல்களாக நெஞ்சில் நிறைந்தவை. சிர்காழி உச்சரிப்புக்கு இவர் உச்சரிப்பும் பிசிறில்லாமல் வரும்.   டி.ஆர்.மகாலிங்கத்துடன் பாடும்போதும் இவர் குரல் சளைக்காமல்  ஈடுகொடுத்து  மணிபிரலாவகமாக  துள்ளி வரும். மாலையிட்ட மங்கையில் ,'ஆடை  கட்டி வந்த நிலவோ ...என்று அவர் பாடி வைக்க ...இவர் குரல் '...துள்ளி துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை.....என்று பாடி வரும் இனிமையே அலாதிதான்.  சி. எஸ் ஜெயராமனுடன்...பாவை விளக்கில் பாடிய 'காவியமா    நெஞ்சின் ஓவியமா...., புதையலில் ,'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
...யாரால் மறக்கமுடியும்.   டி .எம். எஸ் உடன் பாடியது அதிகம் என்றாலும், இவர்களுடன் பாடும்போது அவர் குரல் இன்னும் சற்று மென்மையாகவே ஒலித்து அந்தப் பாடல்களுக்கு அடிமையாகி விடுகிறது என்றால் மிகையாகாது..



கோதைதனபாலன்.

 
http://www.youtube.com/watch?v=ZH0R37fyyYU


No comments:

Post a Comment