திரை உலகின் ஆரம்ப காலக் கட்டத்தில் வட இந்திய, தென்னிந்திய திரைப்படங்கள் ஒன்றே போல் எடுக்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டன. அதுவும் பம்பாயில் மட்டுமே தலைமையிடம் செயலாற்றி , டங்கன் போன்ற ஆங்கில இயக்குனராலேயே தயாரிக்கப் பட்டதால் வசனமும், பாடலும் வட மொழி சாயலே கொண்டிருந்தன.மெதுவாக இந்தநிலை மாறி
அந்தந்த பிராந்திய மொழிகளில் திரைப்படம் உருவாக்கி வரும் காலத்தில் ,
தமிழில்
நல்ல வளமான தமிழ் வசனமும், பாடல் பொறுத்த அளவில் பல கிராமிய பாடல்கள் அழகான,
அளவான சேர்க்கைகளுடன் வெகு இனிமையாக பவனி வந்தன.இதில் ,
கே.வி.மகாதேவனும்,எம்.எஸ் .விஸ்வநாதனும் பிரசித்தி பெற்றனர்.
நான் நினைவு கொண்டவரை டி.லிங்கப்பா இசையில் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் 'ஆத்துக்குள்ள ஊத்து வெட்டி ..'.
அழகர்மலை கள்வனில் 'தேன் தூங்கும் தென் பொதிகை சாரலிலே... ' , கவலை இல்லாத மனிதனில்,'காட்டில் கனியுறங்கும் ,கழனியிலே நெல் உறங்கும் ..'
நாடோடி மன்னனில் , 'சும்மா கிடந்த நிலத்த கொத்தி...' பிள்ளைக் கனியமுதில் ,'ஏர்முனைக்கு நேர் இங்கர் எதுவுமே இல்லே...'
பிறகு 'மணப்பாறை மாடுகட்டி ... ' நீதிக்கு பின் பாசத்தில் ,'காடு கொடுத்த கனியிருக்கு... பாடல்களை கேட்கும்போது மனம் அள்ளிக்கொண்டு போகும்.
பாகப்பிரிவினையில் ,'தாழையாம் பூமுடிச்சு .... , தை பிறந்தால் வழி பிறக்கும் பாடல் ,சாந்து போட்டு கமகமங்க...சிவகங்கை சீமையில் , 'ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே..
நாலு வேலிநிலம் படத்தில் எவ்விதம் மறக்க இயலும். நமது நாட்டுப்புற தாலாட்டுக்கு இணை ஏதுமில்லை...அன்று மகாதேவன் 'சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா..'தொடங்கி
இன்று இளைய ராஜாவின் 'தேனே தென்பாண்டி மீனே...' தொடர்ந்து வரும் தமிழிசையின் பெருமை சாகா வரம் பெற்றது.
கோதைதனபாலன்

No comments:
Post a Comment