Search This Blog

Tuesday, October 4, 2011

தேனிலவு



முதல் முதலாக மன மகிழ்வுடனே இறுதிவரை பார்த்த,மறுமுறையும் பார்க்க வைத்த படம்.கதை சாதரணமானதுதான்.சின்ன,சின்ன குழப்பங்கள் ,கதையை சோகமயமாக்காமல் ,நகைச்சுவை உணர்வுடன்  நகர்த்தி சென்றதில் இயக்குனர் ஸ்ரீதருக்கு வெற்றியே.நான் அறிய தமிழ் படங்களில் இவ்வளவு அழகாக வேறு எந்த படமும் காஷ்மீரை காண்பித்தது இல்லை.தங்கவேலு,சரோஜா காமெடி இன்றும் நம்மை சிரிக்க வைப்பது ஆகும்.குறிப்பாக தட்டு கொண்டு படகு ஓட்டுவது மறக்க முடியாத ஒன்று.பாடல்கள் அருமை .ராஜாவின் இசை இறக்குமதியானாலும் கண்ணதாசன் வரிகளுடன் மனதை கவர்பவை. வைஜயந்தி பாடுவதாக அமைந்த ..'மலரே மலரே தெரியாதோ..' ,ஜெயந்தி பாடுவதான 'ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..' இன்றும் எல்லோர் நினைவிலும் அசை போடுவன.



 ஹிட்டான பாடல்கள்:  ஓஹோ எந்தன் பேபி,  
                                                  
                                                 பாட்டு பாடவா ,பார்த்து பேசவா. 

                                                 காலையும் நீயே,மாலையும் நீயே.....  பாடலில் ஹம்மிங் ஜானகி குரலில் அழகாக இருக்கும்.  

No comments:

Post a Comment