பொழுது போக்க சில படங்கள் என்று சொன்னால் அந்த கட்டமைப்பில் வெளியான பல திரைப்படங்களில் நான் மிகவும் ரசித்த சிலவற்றில் அதிகமாக மனதில் இனியதொரு தாக்கம் தந்த வரிசையில் முன்னிருப்பது ,
Search This Blog
Saturday, September 19, 2020
#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் சில
#அன்றுமனதைப்பாதித்த சில திரைப்படங்கள் .
அவள் ஒரு தொடர்கதை ..
நன்கு திரைக் கதைகளை அலசிப் பார்க்கும் ஒரு பக்குவம் என்னுள் வளர்ந்திருந்ததை சில படங்களால் தெளிவுற அறிந்துகொண்டேன் . அதுவரை பொழுதுபோக்க திரைக்கதைகள் , பாடல்கள் என்றே இருந்த எனக்கு , சமூகச் சாடலில் ஒரு அங்கமாக , கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் ..பெண்மையின் மேன்மையை உரசிப் பார்க்கும் ஒரு புதிய வெளிச்சத்தை பார்க்கும் மக்களிடம் உருவாக்கியது . ஒவ்வொரு வசனமும் மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது . வீட்டிற்கு வந்து பல நாட்களாக என் மனம் இது பெண்மைக்கே வந்த சாபமோ என்று தோன்றியது . காரணம் அதை நடைமுறை வாழ்க்கையில் நானறிந்த பெண் மருத்துவர்கள் வாழ்வில் கண்டுள்ளேன் . எவ்வளவு உண்மை
தலைமகள் சுஜாதா தனது சம்பாத்தியத்தில் அன்னான் தங்கைகள் , தாய் தந்தையரை பராமரிக்கிறார். பொறுப்பற்ற அன்னான் குடிகாரன் . மனம் அதிர்ந்து போனேன் ..எவ்வளவு பெரிய உண்மையை துணிந்து சொல்லியும் பலனில்லை . காதலித்தவனையும் கைபிடிக்காது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறாள் . தனக்கென்று ஒரு மாப்பிள்ளை வர இன்னொரு தங்கைக்கு முடித்து வைத்து , அண்ணனை பறிகொடுத்து , திருமணமான இன்னொரு தங்கை விதவைக்கு கோலம் ...திரும்பவும் இவள் வேலை , கடமையாக தொடர்கிறது .
பொறுப்பற்ற பத்தாம் பசலித்தனமான பெற்றோரை நன்கு அடையாளம் காட்டியது . கவியரசரின் பாடல் ..தெய்வம் தந்த வீடு ... ஒவ்வொரு வரியும் இன்றைக்கும் நான் வியந்து ரசிப்பேன் .. " ... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ....."
உதிரிப் பூக்கள் .
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் கைவண்ணம் . பொருத்தமான நடிகை அஸ்வினி . நல்ல பாங்கான தோற்றம் . அமைதியான பெண் . புரிந்து கொள்ளாத கணவன் . இல்வாழ்க்கை அர்த்தமே புரியாத கணவன் . அன்பிற்கு ஏங்கும் மனம் , குழந்தைகள் மீதே அதீத பாசம் .... ஆக மகிழ்ச்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாத கொடுமையான வாழ்க்கை . முகபாவத்திலேயே படம் முழுக்க நம்மை கவர்ந்திடுவார் . அடிப்படையில் பெண் மனது பற்றி அறியாமலே தந்தை முடிவெடுத்து திருமணம் நடத்தி வைத்ததால் வேனும் யதார்த்த கெடுதலான விளைவுகள் ...ஊரறிய மெதுவாக அரங்கேறும் . இறுதியில் பஞ்சாயத்தார் கணவனான விஜயனையே ...தனக்கே தண்டனையைத் தெரிந்தெடுக்க , திருந்தாத ஆணாதிக்க மனா நிலையில் நீரில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார் . நம் மனதில் ஒரு கேள்வி ... வாழும் பெண் இப்படி விரும்பமாட்டாள் .... ஆனால் சமூகத்தில் சில விதிகள் இவ்வாறு விதிக்கப் படுகிறது .
'' >> அழகிய கண்ணே ! உறவுகள் நீயே .....' இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் ... என் மனம் அழும் .
அழகி ...
எனது பிந்திய நாட்களில் நான் வியந்து ரசித்த ஒரு திரைப் படம் . மெலிதான இளம் பிராய காதல் வெகு இயல்பாக ... பார்த்திபன் காண்பித்திருப்பார் . பின்னால் ஏழைக் காதலன் வசதியு டையவனாகிறான் ... வேறொருத்தியை மணந்து வாழ்கிறான் .... சீமான் மகளோ இன்னொருவனை மணந்து ஏழ்மை நிலைகுத்தி தள்ளப் பட்ட நிலையில் ...குழந்தைகள் , வியாதி பீடித்த கணவன் இவர்களுடன் அபலையாக ..இவனை சந்திக்க .. அவளுக்கு இவன் நல்ல நிலைமை மகிழ்வைத் தருகிறது . அவனுக்கோ மனதில் ஒரு பூகம்பம் இவள் நிலை கண்டு . மெலிதான அரும்பிய நிலையிலேயே விலகிய காதலுணர்வுகள் மறுபடியும் மனங்களில் வலுவில்லாத நூலிழைகளாக தோன்ற அவர்களின் நல்வாழ்விற்கு இவன் கவனம் எடுத்து உதவுகிறான் . பார்த்திபன் நாயகனாக தேவயானி உண்மை அறிந்த மனைவியாக ..வங்க நடிகை நந்திதா ..? அமைதியான முகவெட்டு அற்புதமாக நடித்திருப்பார் .மாணவப் பருவத்தில் படித்தவர்களும் அருமை .
விளம்பரம் அதிகம் இல்லாமலே அதிக நாட்கள் ஓடியது . வேறொருவர் சொல்லி இதை பார்த்தேன் ...இப்படி ஒரு கதையை திரைப்படமாகி வெற்றியும் கண்டா
பார்த்திபனை எண்ணி வியந்தேன் .
"...... ஒளியிலே தெரிவது ...', " பாட்டுச் சொல்லி ....' பாடல்கள் இன்னும் ஒரு புதுமையான ரசனையில் என் மனம் ரசிக்கும் .
kothaidhanabalan
(செம்மொழியாள் ) .
#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் .
என்னையு மறியாமல் , ஏனென்றும் புரியாமல் பலமுறை பார்க்கவைத்த திரைப்படங்கள் மூன்று , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , உலகம் சுற்றும் வாலிபன் ,
திருவிளையாடல் .. // ஐந்துமுறை அடுத்தடுத்து விரும்பிப் பார்த்தேன் . இன்றைக்கு எழுதச் சொன்னால் புராணங்களுக்கு நல்ல விளக்கம் , நல்ல நடிப்பு ,பாடல்கள் அருமை என்ற ரீதியில் சொல்லிச்செல்லலாம் . ஆனால் விமரிசிக்க இயலாத பருவத்தில் என் மனம் அதில் உள்வாங்கியது எதெதை என்று யோசித்து பார்க்கிறேன் .
வண்ணப் படம் ஆரம்பக் காட்சி மிகவும் அழகு . சம்போ மகா தேவா ...நந்தி , பூத கணங்களுடன். பாடல் காட்சி மனதைத்தொட்டது .என்னைக் கவர்ந்த ஒன்று .
கே. பி. சுந்தராம்பாள் ...காட்சிகள் முதன்மையாக எனது இதயத்தை தொட்டன . கனி சம்பந்த வசனங்களும் , பழம் நீயப்பா ... பாடல்களும் ...நான் தலையசைத்து ரசித்தேன் . ' ஆறுவது சினம் , கூறுவது தமிழ் ..." வரிகளில் ஒரு ஆளுமையை காட்சிக்கேற்ப அழகுற அமைந்தது கண்டு ரசித்தேன் . நக்கீரன் , தருமி வசனம் , சிவ பெருமான் தருமி ..காட்சிகள் இன்றைக்கும் தனி சிறப்பு . எ.பி. நாகராஜன் நக்கீரன் நடிப்பில் ஒரு அமைதியான கம்பீரம் கண்டேன் . இறுதியில் சிவாஜி ..பாலையா ...காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்த ஒன்று .
பாட்டும் நானே ...பாவமும் நானே ... பாடல் அனைத்திற்கும் முத்தாய்ப்பு ஆனது . அத்தனை பாடல்களும் அருமை கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் . டி.எம்.எஸ். , சுசீலாம்மா , ஜானகியம்மா , சீர்காழி கோவிந்தராஜன் , டி ஆர். மகாலிங்கம் , பாலமுரளி கிருஷ்ணா , பி.பி. ஸ்ரீனிவாஸ் ...அத்தனைபேரும் கே பி எஸ் பாடல்களுடான் பவனி வந்தது ...ஒரு அருமையான உணர்வைத் தந்தது என்றும் சொல்லலாம் .
ஒரு சின்ன நெருடல் இந்தப் படத்தில் எனக்கு உண்டு . ஓஎகே தேவர் ...சாவித்திரி , சிவாஜி சம்பந்தப் பட்ட காட்சி . யாகத்திற்கு அழைப்பில்லை .. என்ற பிரச்னை . அதில்
.கணவன் பேச்சை மீறி தகப்பன் வீடு சென்றதால் பார்வதிக்கு கிடைத்த தண்டனை ... என்று முடிவெடுத்து பேசும் வசனம் ...இன்றைக்கும் சரியானது அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது . ஆணாதிக்க சிந்தனை அவ்வளவே . மற்றபடி சிவாஜியின் திருவிளையாடல் ..திரைத்துறையில் முதன்மையாக என்னை பாதித்த படம் .
தில்லானா மோகனாம்பாள் ...// சமூகக் கதை . கலைகளின் வழி ...தமிழருக்கே உரிய நாதஸ்வரம் , பரத நாட்டியம் ..கலைஞர்களிடம் மெலிதாக இழையோடிய காதல் கதை . பத்மினி அவர்களின் நாட்டியம் , சுசீலாம்மாவின் பாடல்கள் என்னை திரும்பவும் பார்க்க .வைத்தன இரண்டுமுறை விரும்பி சென்று பார்த்தேன் . சிவாஜி , பாலையா, பத்மினி ...ரயில் வண்டி காட்சிகள் , நம்பியார் மாளிகையில் நாயனா வாசிப்பு , நாகேஷின் நயமான வில்லத்தனம் ..தனி சிறப்பாக மனோரமா ..ஜில் ஜில் ராணி ...டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ....ஈஸ்வரி அம்மா குரலில் .. குரலில் பாடி ஆடி நடித்தது .. நல்ல ரசனை . புதுமையை நோக்கி நகர்ந்த காலத்தில் பழமையைப் பாராட்டி வெற்றி கண்டா படம் . கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .
உலகம் சுற்றும் வாலிபன் .. // மூன்று முறை அடுத்தடுத்து பார்த்தேன் . ஒரு உண்மை எனக்கு புரட்சி நடிகர் கதையில் ... எப்போதுமே எதையும் வென்றெடுக்கும் குணம் பரவலாக இருப்பதை ரசிப்பேன் . அது இந்தப் படத்தோடு முடிந்தது . இதன் பிறகு அவ்வளவாக நான் ரசிக்கவில்லை . அன்றைக்கு இந்திப் படங்களுக்கு மட்டுமே வ ண்ணப் படங்கள் , மற்றும் வெளிநாடுகளில் எடுக்கும் அனுமதி எளிதாக கிடைத்த வேளையில் , தமிழ் படங்களில் ஒரு தேக்க நிலை உருவாயிற்று . அது இசையிலும் பாதித்தது . இந்த சூழ்நிலையில் எம்.ஜி. ஆர். அவர்கள் நல்ல செலவில் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்தார் . இரண்டு வேடங்களில் அவருக் . கேற்ற கதையில் ஜனரஞ்சகமாக எடுத்திருந்தார் . ஜப்பானில் நடை பெற்ற உலக சந்தையை ..." உலகம் .. உலகம் .' பாடலில் அழகுற காண்பித்திருப்பார் .
தாய்லாந்து நடிகை ஒருவர் நடித்திருப்பார் . அவரது கொஞ்சும் தமிழ் என்னை வியக்கவைத்தது . வித்தியாசமான அவர் பங்களிப்பு மனம் கவர்ந்த ஒன்று . " பச்சைக்கிளி ...முத்துச்சரம் ..முல்லைக்கொடி யாரோ .." பாடலில் அந்த ஊர் இசையும் பயின்று வந்திருக்கும் . இவ்வளவு செலவிற்கும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்து பெரும் வெற்றியைத் தந்தன என்றால் அது மிகை இல்லை .
இதற்குமுன் இத்யாதி சங்கதிகளை இந்தப்பெற்று இந்திப் படங்களே முன்னணியில் நின்று மக்களைக் கவர்ந்த நிலையில் , வடஇந்திய பெரும் கலைஞர்களும் இதில் கையாண்ட தொழில் நுட்ப படப்பிடிப்புகளை பாராட்டி வியந்து சென்றனர் . இது எம் ஜி ஆர் தமிழ்த் திரைக்கு ஒரு விளம்பர அளவில் அளித்த பெரிய பங்களிப்பு என்றே சொல்லலாம் .
அன்றைய உணர்வுகள் அப்படியே இங்கே .
கோதை தனபாலன்













