பொழுது போக்க சில படங்கள் என்று சொன்னால் அந்த கட்டமைப்பில் வெளியான பல திரைப்படங்களில் நான் மிகவும் ரசித்த சிலவற்றில் அதிகமாக மனதில் இனியதொரு தாக்கம் தந்த வரிசையில் முன்னிருப்பது ,
"காதலிக்க நேரமில்லை ."
இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் . சித்திராலய தயாரிப்பில். அதுவரைக்கும் சற்று அழுத்தமான உணர்வுகளை பதித்த வண்ணமே அவரது திரைப்படங்கள் அமைந்திருக்கும் . ஆனால் இதுவோ முற்றிலும் வேறுபட்டது . அன்றைக்குப் புதுமுகங்களான முத்துராமன் , காஞ்சனா , ரவிச்சந்திரன் ,ராஜ ஸ்ரீ இவர்களை கதாநாயகர்களாக கொண்டு நகைச்சுவையான திரைக்கதை அம்சத்தோடு வெளிவந்தது .இரு நண்பர்கள் பொய்நாடகம் நடத்தி காதலில் வெற்றி பெறுதல் ரசிக்கத் தக்கது .
அதுவும் நாகேஷ் , டி.எஸ். பாலையா இருவரும் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் இன்றைக்கும் நயமான தரத்தில் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும் .பாடல்கள் மெல்லஇசை மன்னர்கள் இசையில் மிகவும் அற்புதம் . வண்ணப்பிடிப்பில் ஊட்டி யின் அழகான இடங்கள் பல கோணங்களில் படமாக்கப்பட்ட விதம் அருமை .
பாடல்கள் அனைத்தும் புதுமைச். சுவையில் . அனுபவம் புதுமை ..பாடல் ஒரு மேற்கத்திய இசை தாக்கத்தில் , அதை ஒட்டி ஒரு துள்ளல் நடனம் குமாரி சச்சு , நாகேஷ் , " மலரென்ற முகம் ..' பாடலுக்கு அருமை . நாளாம் நாளாம் திருநாளாம் ..' இன்றும் கேட்க இனிமை ..நல்ல சுவை ...கவியரசர் வரிகளில் , ஜேசுதாஸ் , ஸ்ரீநிவாஸ் , ஈஸ்வரி , சுசீலா அவர்கள் பாடி அசத்தினாலும் .. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் முத்துராமன் , மாறுவேடத்தில் காஞ்சனாவுடன் பாடி நடிக்கும் ம் ... " காதலிக்க நேரமில்லை , காதலிப்பார் யாருமில்லை ...' பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது . பாலையா அவர்களிடம் நாகேஷ் திரைக்கதை சொல்லும் இடம் ... என்ன நடிப்பு ..என்ன நடிப்பு ...! வேறு யாரும் இப்படி செய்திருக்க முடியாது . என்றென்றும் நினைத்து அசைபோடக்கூடிய படம் .
எங்க வீட்டுப்பிள்ளை ..
எம்.ஜி. ஆர் அவர்கள் இரட்டை வேடம் . புரட்சி நடிகர் புரட்சி நடிகர்தான் . தன்னை கதாநாயகனாகவே காண்பிக்கும் திரையில்தான் இவர் நடிகையாவார் . அதற்கு ஏற்ற கதை , பாடல்களைத்தான் தெரிந்தெடுப்பார் . இதுவும் வண்ணப்படம் . கோழையாக ஒரு எம் ஜிஆர் ராமு என்ற பெயரில் , , தீரத்தோடு எம் ஜி ஆர் இளங்கோ என்ற பெயரில் , இடம் மாறி நம்பியாரை சாடும் இடங்களில் வெகு அற்புதமாக இருக்கும் . சரோஜா தேவி , ரத்னா அவர்கள் கதாநாயகிகளாக . தொய்வே இல்லாமல் கதை செல்லும் . பண்டரிபாய் கனிவு ஒரு பக்கம் , ரங்காராவ் மிடுக்கு ... வில்லத் தனங்கள் சற்று நகைசுவையாக ஒரு வித்தியாசமான அமைப்பில் கதை பின்னப்பட்டிருக்கும் . பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் . நான் ஆணையிட்டால் ..அது நடந்து விட்டால் ...' பாடல் பெரிய வரவேற்பை பெற்றது . உணவகத்தில் காசு தராமல் எம் ஜி ஆர் .. உணவருந்தி அடிக்கும் லூட்டி வெகுவாக ரசித்தேன் . வாலி , ஆலங்குடி சோமு அவர்கள் பாடல்கள் .சண்டைக் காட்சிகள் எம் ஜி யா ர்க்கே உரியது . அன்றைக்கு இதுபோன்ற கதையமைப்பிற்கே நான் பார்த்ததில் எம் ஜி ஆர் திரைப்படங்கள் அதிகம் .உலகம் சுற்றும் வாலிபன் பிறகு , அரசியலுக்கு வந்த பிறகு ...அவர் படங்கள் சோபிக்க வில்லை .
ஊட்டி வரை உறவு ....
இயக்குனர் ஸ்ரீதரின் மற்றுமொரு நகைசுவை திரைப்படம் . நடிகர் திலகம் , முத்துராமன் , கே.ஆர். விஜயா, எல் விஜயலக்ஷ்மி ... கனடித்தது . கதை இவர்களை சுற்றி . பாலையா மகள் ...இடம் மாறி விடுவதால் வரும் பிரச்சனைகள் சுவையோடு சொல்லப்பட்டிருக்கும் .பாலையா, வி.கே. ஆர் ...சம்பந்தப் பட்ட நகைச் சுவை அருமை . மெல்லிசை மன்னர்கள் இசையில் ...." ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி..." பெரிதும் வரவேற்பைப் பெற்றது . சுசீலாம்மா குரலில் , ' தேடினேன் வந்தது ..' இன்றும் எல்லோரும் விரும்பும் பாடலாக உள்ளது . நாகேஷ் வேடிக்கையான வில்லத்தனம் . இதுவும் ஊட்டியை சுற்றி பலகோணங்களில் படமெடுக்கப்பட்டது .' அங்கே மாலை மயக்கம்.. ' பாடல் காட்சியில் சில நொடிகளெவரும் பாலையா முகபாவம் சிரிப்பை வர வாழ்க்கைக்கும் .
மறக்கமுடியாது மனதில் அசைபோடும் திரைப்படங்கள் இவை .








No comments:
Post a Comment