Search This Blog

Thursday, July 22, 2021

 


பெண்ணீயம்.. 1 st episode
நான் காணும் தமிழ் திரையில் ...ஒரு பெண்ணின் நிலை... சில சிறப்பான இயல்புகளில்..
பெண் முன்னேற்றம் கருதி அவர்களிடம் இருக்கும் சிறப்பம்சங்களை பெண்மையின் இயல்புகளினின்றே வெளிக்கொணர்ந்த படங்கள் வெற்றிகரமாய் அன்று வெளி வந்தன.சரித்திர அமைப்பிலும், புராண அமைப்பிலுமே பல அரங்கேறின.
அன்று 'தியாக பூமி " கல்கி அவர்களின் உன்னத நாவலாய் வந்தது. கல்கத்தாவில் மேல்நாட்டு மோகத்தால் கணவன் நாயகியை விலக்கி வைக்க இவள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாய் தனது கிராமத்திற்கு வருகிறாள் . இவள் பெயர் சாவித்திரி .
தந்தை சம்பு சாஸ்திரிகள் ஊரில் காந்தியவழியில் ஒரு சேரியில் புயலால் பாதிக்கப் பட்டவர்களது தனது இல்லத்தில் இடம்தந்து உதவி செய்ய அவரை அவர் சாதியினர் ஒதுக்கி வைக்கின்றனர் . பிறகு சென்னை சென்று அங்கு ஒரு சாவடி குப்பத்தில் சமூக சேவை செய்து வருவார் .
இதற்கிடையில் இவளுக்கும் பெண்குழந்தை பிறந்துவிட அதை எடுத்துக் கொண்டு மெட்றாஸ்க்குச் செல்கிறாள் . குழந்தையுடன் ஊரை விட்டு வெளியேறியவள்...
சமூகத்தில் தன் இளமைக்கும் கற்புக்கும் விலை பேசுவதையே சமூகத்தில் மனம் நொந்து தற்கொலை முயற்சியில் இறங்கும் சமயத்தில்.....
தனது தந்தை நிலைமையும் புரிந்து, அவருமறியாமலே குழந்தையை அவரிடம் விடுத்து பம்பாய் சென்று நன்முறையில் முன்னேறி உயர்வான இடத்தை அடைந்து உமாராணி என்ற பெயர் மாற்றத்தோடு சென்னைக்கு வருகிறாள் .
யதார்த்தமாக அவள் அப்பா சமூக சேவை செய்யும் குப்பத்தில் மகள் சாருவும் வளர்கிறாள் என அறிந்து , உணர்ந்து அங்கு சென்று பார்க்கும்போது அவர்கள் இடம்பெயர்ந்து விடுகின்றனர் . இவள் அவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை உதவி நாடி செல்லும்போது அங்கு தண்டனை பெற்ற கணவனை காணுகிறாள் . அவனும் இவளை அறிந்து கொள்கிறான் .
இவள் அவனை அதிலிருந்து விடுவிக்கிறாள் . ஆனால் அவனோடு சேர்ந்து வாழும் எண்ணத்திற்கு மறுத்துவிடுகிறாள் . தந்தையின் சொல்லையும் மறுத்துவிடுகிறாள் . கோர்ட்டில் கணவனுக்கு சாதகமாக இருக்க குழந்தை அவனோடு சேர்ந்துவிட இவள் காந்திய கொள்கையில் இறங்கி சேவா சங்கத்திற்கு தனது வாழ்வை அர்ப்பணித்து விடுகிறாள் .
இதையறிந்த கணவனும் மனம் திருந்தி அவனும் சமூக சேவகனாக உருவெடுக்கிறான் . .
ஆனால் இவள் தனது தந்தையின் பத்தாம்பசலித்தனமான , சேர்ந்து வாழுங்கள் என்ற வார்த்தையை ஏற்க மறுத்து விடுகிறாள்.
சுதந்திரப் போராட்டத்திற்கு தன்னைத் தியாகம் செய்வாளேயன்றி , கணவனிடம் அடிமைத் தனத்திற்கு ஒருநாளும் தியாகம் செய்யமாட்டேன் என்று உரைத்திடுவாள்.
பின்னர் தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை என்று நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள கணவனும் இவற்றில் மனமுவந்து பங்கேற்பதைப் பார்த்து .. அவர் மனம் இளகுவதாக கதை அமைப்பு முடியும்.
மண்ணின் மைந்தர்களாக அவர்கள் தங்களை பாவித்துக் கொள்வார்கள் .
சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னரே வந்து சமூகத்தில் வெற்றி கொடி கண்ட திரைப்படம் இந்த தியாக பூமி.
kothaidhanabalan
20 May 1939 திரைப்படம்
நடிகர் நடிகைகள்
S. D. Subbulakshmi
Baby Saroja
Papanasam Sivan
Directed by K. Subramanyam
May be an image of 4 people and people standing
 

No comments:

Post a Comment