Search This Blog

Thursday, July 22, 2021

 


பெண்ணீயம்.. 1 st episode
நான் காணும் தமிழ் திரையில் ...ஒரு பெண்ணின் நிலை... சில சிறப்பான இயல்புகளில்..
பெண் முன்னேற்றம் கருதி அவர்களிடம் இருக்கும் சிறப்பம்சங்களை பெண்மையின் இயல்புகளினின்றே வெளிக்கொணர்ந்த படங்கள் வெற்றிகரமாய் அன்று வெளி வந்தன.சரித்திர அமைப்பிலும், புராண அமைப்பிலுமே பல அரங்கேறின.
அன்று 'தியாக பூமி " கல்கி அவர்களின் உன்னத நாவலாய் வந்தது. கல்கத்தாவில் மேல்நாட்டு மோகத்தால் கணவன் நாயகியை விலக்கி வைக்க இவள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாய் தனது கிராமத்திற்கு வருகிறாள் . இவள் பெயர் சாவித்திரி .
தந்தை சம்பு சாஸ்திரிகள் ஊரில் காந்தியவழியில் ஒரு சேரியில் புயலால் பாதிக்கப் பட்டவர்களது தனது இல்லத்தில் இடம்தந்து உதவி செய்ய அவரை அவர் சாதியினர் ஒதுக்கி வைக்கின்றனர் . பிறகு சென்னை சென்று அங்கு ஒரு சாவடி குப்பத்தில் சமூக சேவை செய்து வருவார் .
இதற்கிடையில் இவளுக்கும் பெண்குழந்தை பிறந்துவிட அதை எடுத்துக் கொண்டு மெட்றாஸ்க்குச் செல்கிறாள் . குழந்தையுடன் ஊரை விட்டு வெளியேறியவள்...
சமூகத்தில் தன் இளமைக்கும் கற்புக்கும் விலை பேசுவதையே சமூகத்தில் மனம் நொந்து தற்கொலை முயற்சியில் இறங்கும் சமயத்தில்.....
தனது தந்தை நிலைமையும் புரிந்து, அவருமறியாமலே குழந்தையை அவரிடம் விடுத்து பம்பாய் சென்று நன்முறையில் முன்னேறி உயர்வான இடத்தை அடைந்து உமாராணி என்ற பெயர் மாற்றத்தோடு சென்னைக்கு வருகிறாள் .
யதார்த்தமாக அவள் அப்பா சமூக சேவை செய்யும் குப்பத்தில் மகள் சாருவும் வளர்கிறாள் என அறிந்து , உணர்ந்து அங்கு சென்று பார்க்கும்போது அவர்கள் இடம்பெயர்ந்து விடுகின்றனர் . இவள் அவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை உதவி நாடி செல்லும்போது அங்கு தண்டனை பெற்ற கணவனை காணுகிறாள் . அவனும் இவளை அறிந்து கொள்கிறான் .
இவள் அவனை அதிலிருந்து விடுவிக்கிறாள் . ஆனால் அவனோடு சேர்ந்து வாழும் எண்ணத்திற்கு மறுத்துவிடுகிறாள் . தந்தையின் சொல்லையும் மறுத்துவிடுகிறாள் . கோர்ட்டில் கணவனுக்கு சாதகமாக இருக்க குழந்தை அவனோடு சேர்ந்துவிட இவள் காந்திய கொள்கையில் இறங்கி சேவா சங்கத்திற்கு தனது வாழ்வை அர்ப்பணித்து விடுகிறாள் .
இதையறிந்த கணவனும் மனம் திருந்தி அவனும் சமூக சேவகனாக உருவெடுக்கிறான் . .
ஆனால் இவள் தனது தந்தையின் பத்தாம்பசலித்தனமான , சேர்ந்து வாழுங்கள் என்ற வார்த்தையை ஏற்க மறுத்து விடுகிறாள்.
சுதந்திரப் போராட்டத்திற்கு தன்னைத் தியாகம் செய்வாளேயன்றி , கணவனிடம் அடிமைத் தனத்திற்கு ஒருநாளும் தியாகம் செய்யமாட்டேன் என்று உரைத்திடுவாள்.
பின்னர் தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை என்று நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள கணவனும் இவற்றில் மனமுவந்து பங்கேற்பதைப் பார்த்து .. அவர் மனம் இளகுவதாக கதை அமைப்பு முடியும்.
மண்ணின் மைந்தர்களாக அவர்கள் தங்களை பாவித்துக் கொள்வார்கள் .
சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னரே வந்து சமூகத்தில் வெற்றி கொடி கண்ட திரைப்படம் இந்த தியாக பூமி.
kothaidhanabalan
20 May 1939 திரைப்படம்
நடிகர் நடிகைகள்
S. D. Subbulakshmi
Baby Saroja
Papanasam Sivan
Directed by K. Subramanyam
May be an image of 4 people and people standing
 

Saturday, September 19, 2020

#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் சில

 பொழுது போக்க சில படங்கள் என்று சொன்னால் அந்த கட்டமைப்பில் வெளியான பல திரைப்படங்களில் நான் மிகவும் ரசித்த சிலவற்றில் அதிகமாக மனதில் இனியதொரு தாக்கம் தந்த வரிசையில் முன்னிருப்பது ,

"காதலிக்க நேரமில்லை ."
இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் . சித்திராலய தயாரிப்பில். அதுவரைக்கும் சற்று அழுத்தமான உணர்வுகளை பதித்த வண்ணமே அவரது திரைப்படங்கள் அமைந்திருக்கும் . ஆனால் இதுவோ முற்றிலும் வேறுபட்டது . அன்றைக்குப் புதுமுகங்களான முத்துராமன் , காஞ்சனா , ரவிச்சந்திரன் ,ராஜ ஸ்ரீ இவர்களை கதாநாயகர்களாக கொண்டு நகைச்சுவையான திரைக்கதை அம்சத்தோடு வெளிவந்தது .இரு நண்பர்கள் பொய்நாடகம் நடத்தி காதலில் வெற்றி பெறுதல் ரசிக்கத் தக்கது .
அதுவும் நாகேஷ் , டி.எஸ். பாலையா இருவரும் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் இன்றைக்கும் நயமான தரத்தில் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும் .பாடல்கள் மெல்லஇசை மன்னர்கள் இசையில் மிகவும் அற்புதம் . வண்ணப்பிடிப்பில் ஊட்டி யின் அழகான இடங்கள் பல கோணங்களில் படமாக்கப்பட்ட விதம் அருமை .
பாடல்கள் அனைத்தும் புதுமைச். சுவையில் . அனுபவம் புதுமை ..பாடல் ஒரு மேற்கத்திய இசை தாக்கத்தில் , அதை ஒட்டி ஒரு துள்ளல் நடனம் குமாரி சச்சு , நாகேஷ் , " மலரென்ற முகம் ..' பாடலுக்கு அருமை . நாளாம் நாளாம் திருநாளாம் ..' இன்றும் கேட்க இனிமை ..நல்ல சுவை ...கவியரசர் வரிகளில் , ஜேசுதாஸ் , ஸ்ரீநிவாஸ் , ஈஸ்வரி , சுசீலா அவர்கள் பாடி அசத்தினாலும் .. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் முத்துராமன் , மாறுவேடத்தில் காஞ்சனாவுடன் பாடி நடிக்கும் ம் ... " காதலிக்க நேரமில்லை , காதலிப்பார் யாருமில்லை ...' பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது . பாலையா அவர்களிடம் நாகேஷ் திரைக்கதை சொல்லும் இடம் ... என்ன நடிப்பு ..என்ன நடிப்பு ...! வேறு யாரும் இப்படி செய்திருக்க முடியாது . என்றென்றும் நினைத்து அசைபோடக்கூடிய படம் .
எங்க வீட்டுப்பிள்ளை .. எம்.ஜி. ஆர் அவர்கள் இரட்டை வேடம் . புரட்சி நடிகர் புரட்சி நடிகர்தான் . தன்னை கதாநாயகனாகவே காண்பிக்கும் திரையில்தான் இவர் நடிகையாவார் . அதற்கு ஏற்ற கதை , பாடல்களைத்தான் தெரிந்தெடுப்பார் . இதுவும் வண்ணப்படம் . கோழையாக ஒரு எம் ஜிஆர் ராமு என்ற பெயரில் , , தீரத்தோடு எம் ஜி ஆர் இளங்கோ என்ற பெயரில் , இடம் மாறி நம்பியாரை சாடும் இடங்களில் வெகு அற்புதமாக இருக்கும் . சரோஜா தேவி , ரத்னா அவர்கள் கதாநாயகிகளாக . தொய்வே இல்லாமல் கதை செல்லும் . பண்டரிபாய் கனிவு ஒரு பக்கம் , ரங்காராவ் மிடுக்கு ... வில்லத் தனங்கள் சற்று நகைசுவையாக ஒரு வித்தியாசமான அமைப்பில் கதை பின்னப்பட்டிருக்கும் . பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் . நான் ஆணையிட்டால் ..அது நடந்து விட்டால் ...' பாடல் பெரிய வரவேற்பை பெற்றது . உணவகத்தில் காசு தராமல் எம் ஜி ஆர் .. உணவருந்தி அடிக்கும் லூட்டி வெகுவாக ரசித்தேன் . வாலி , ஆலங்குடி சோமு அவர்கள் பாடல்கள் .சண்டைக் காட்சிகள் எம் ஜி யா ர்க்கே உரியது . அன்றைக்கு இதுபோன்ற கதையமைப்பிற்கே நான் பார்த்ததில் எம் ஜி ஆர் திரைப்படங்கள் அதிகம் .உலகம் சுற்றும் வாலிபன் பிறகு , அரசியலுக்கு வந்த பிறகு ...அவர் படங்கள் சோபிக்க வில்லை .
ஊட்டி வரை உறவு .... இயக்குனர் ஸ்ரீதரின் மற்றுமொரு நகைசுவை திரைப்படம் . நடிகர் திலகம் , முத்துராமன் , கே.ஆர். விஜயா, எல் விஜயலக்ஷ்மி ... கனடித்தது . கதை இவர்களை சுற்றி . பாலையா மகள் ...இடம் மாறி விடுவதால் வரும் பிரச்சனைகள் சுவையோடு சொல்லப்பட்டிருக்கும் .பாலையா, வி.கே. ஆர் ...சம்பந்தப் பட்ட நகைச் சுவை அருமை . மெல்லிசை மன்னர்கள் இசையில் ...." ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி..." பெரிதும் வரவேற்பைப் பெற்றது . சுசீலாம்மா குரலில் , ' தேடினேன் வந்தது ..' இன்றும் எல்லோரும் விரும்பும் பாடலாக உள்ளது . நாகேஷ் வேடிக்கையான வில்லத்தனம் . இதுவும் ஊட்டியை சுற்றி பலகோணங்களில் படமெடுக்கப்பட்டது .' அங்கே மாலை மயக்கம்.. ' பாடல் காட்சியில் சில நொடிகளெவரும் பாலையா முகபாவம் சிரிப்பை வர வாழ்க்கைக்கும் .
மறக்கமுடியாது மனதில் அசைபோடும் திரைப்படங்கள் இவை .
கோதை தனபாலன்




 


 
 
 

#அன்றுமனதைப்பாதித்த சில திரைப்படங்கள் .

 அவள் ஒரு தொடர்கதை ..

நன்கு  திரைக் கதைகளை அலசிப் பார்க்கும் ஒரு பக்குவம்  என்னுள் வளர்ந்திருந்ததை  சில படங்களால் தெளிவுற அறிந்துகொண்டேன் .  அதுவரை பொழுதுபோக்க திரைக்கதைகள் , பாடல்கள் என்றே இருந்த எனக்கு , சமூகச் சாடலில் ஒரு அங்கமாக  , கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்  வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை  திரைப்படம் ..பெண்மையின் மேன்மையை உரசிப் பார்க்கும் ஒரு  புதிய வெளிச்சத்தை  பார்க்கும் மக்களிடம் உருவாக்கியது . ஒவ்வொரு வசனமும் மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது . வீட்டிற்கு வந்து பல நாட்களாக என் மனம் இது பெண்மைக்கே வந்த சாபமோ என்று தோன்றியது . காரணம் அதை நடைமுறை வாழ்க்கையில்  நானறிந்த பெண் மருத்துவர்கள் வாழ்வில் கண்டுள்ளேன் . எவ்வளவு உண்மை 

தலைமகள்  சுஜாதா தனது சம்பாத்தியத்தில் அன்னான் தங்கைகள் , தாய் தந்தையரை பராமரிக்கிறார். பொறுப்பற்ற அன்னான் குடிகாரன் .    மனம் அதிர்ந்து போனேன் ..எவ்வளவு பெரிய உண்மையை துணிந்து சொல்லியும் பலனில்லை . காதலித்தவனையும் கைபிடிக்காது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறாள் . தனக்கென்று ஒரு மாப்பிள்ளை வர   இன்னொரு தங்கைக்கு முடித்து வைத்து , அண்ணனை பறிகொடுத்து , திருமணமான இன்னொரு தங்கை விதவைக்கு கோலம் ...திரும்பவும் இவள் வேலை , கடமையாக தொடர்கிறது .

பொறுப்பற்ற  பத்தாம் பசலித்தனமான பெற்றோரை நன்கு அடையாளம் காட்டியது .  கவியரசரின் பாடல் ..தெய்வம் தந்த வீடு ...  ஒவ்வொரு வரியும் இன்றைக்கும் நான் வியந்து ரசிப்பேன் ..  " ... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ....."

உதிரிப் பூக்கள் .

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் கைவண்ணம் . பொருத்தமான நடிகை அஸ்வினி .  நல்ல பாங்கான தோற்றம் . அமைதியான பெண் . புரிந்து கொள்ளாத கணவன் . இல்வாழ்க்கை அர்த்தமே புரியாத கணவன் . அன்பிற்கு  ஏங்கும் மனம்  , குழந்தைகள் மீதே அதீத பாசம் .... ஆக  மகிழ்ச்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாத கொடுமையான  வாழ்க்கை . முகபாவத்திலேயே  படம் முழுக்க நம்மை கவர்ந்திடுவார் . அடிப்படையில் பெண் மனது பற்றி அறியாமலே  தந்தை முடிவெடுத்து திருமணம் நடத்தி வைத்ததால் வேனும் யதார்த்த கெடுதலான விளைவுகள் ...ஊரறிய மெதுவாக அரங்கேறும் . இறுதியில் பஞ்சாயத்தார் கணவனான விஜயனையே ...தனக்கே  தண்டனையைத் தெரிந்தெடுக்க , திருந்தாத ஆணாதிக்க மனா நிலையில் நீரில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார் .  நம் மனதில் ஒரு கேள்வி ... வாழும் பெண் இப்படி விரும்பமாட்டாள் .... ஆனால் சமூகத்தில் சில விதிகள் இவ்வாறு விதிக்கப் படுகிறது .  

'' >>  அழகிய கண்ணே ! உறவுகள் நீயே .....'   இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் ... என் மனம் அழும் .

அழகி ...

எனது  பிந்திய நாட்களில் நான்  வியந்து ரசித்த ஒரு திரைப் படம் . மெலிதான  இளம் பிராய  காதல்  வெகு இயல்பாக ...   பார்த்திபன் காண்பித்திருப்பார் .   பின்னால் ஏழைக்  காதலன் வசதியு  டையவனாகிறான் ... வேறொருத்தியை மணந்து வாழ்கிறான் ....  சீமான் மகளோ  இன்னொருவனை மணந்து ஏழ்மை நிலைகுத்தி தள்ளப் பட்ட நிலையில் ...குழந்தைகள்   , வியாதி பீடித்த கணவன் இவர்களுடன் அபலையாக ..இவனை சந்திக்க .. அவளுக்கு இவன் நல்ல நிலைமை மகிழ்வைத் தருகிறது . அவனுக்கோ மனதில் ஒரு பூகம்பம் இவள் நிலை கண்டு . மெலிதான    அரும்பிய நிலையிலேயே விலகிய காதலுணர்வுகள்  மறுபடியும் மனங்களில்  வலுவில்லாத  நூலிழைகளாக தோன்ற அவர்களின் நல்வாழ்விற்கு இவன் கவனம் எடுத்து உதவுகிறான் . பார்த்திபன் நாயகனாக தேவயானி உண்மை அறிந்த மனைவியாக ..வங்க நடிகை   நந்திதா ..? அமைதியான முகவெட்டு அற்புதமாக நடித்திருப்பார் .மாணவப் பருவத்தில் படித்தவர்களும் அருமை .

விளம்பரம் அதிகம் இல்லாமலே   அதிக நாட்கள்  ஓடியது . வேறொருவர் சொல்லி இதை பார்த்தேன் ...இப்படி ஒரு கதையை திரைப்படமாகி வெற்றியும் கண்டா




பார்த்திபனை எண்ணி வியந்தேன் .

"...... ஒளியிலே தெரிவது ...',  " பாட்டுச் சொல்லி ....'  பாடல்கள் இன்னும் ஒரு புதுமையான ரசனையில் என் மனம் ரசிக்கும் .

kothaidhanabalan
(செம்மொழியாள்  )  .

#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் .

 என்னையு  மறியாமல் , ஏனென்றும் புரியாமல் பலமுறை பார்க்கவைத்த திரைப்படங்கள் மூன்று , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , உலகம் சுற்றும் வாலிபன் ,

திருவிளையாடல் ..  //      ஐந்துமுறை அடுத்தடுத்து விரும்பிப் பார்த்தேன் . இன்றைக்கு எழுதச்  சொன்னால் புராணங்களுக்கு நல்ல விளக்கம் , நல்ல நடிப்பு ,பாடல்கள் அருமை என்ற ரீதியில் சொல்லிச்செல்லலாம் . ஆனால் விமரிசிக்க இயலாத பருவத்தில் என் மனம் அதில் உள்வாங்கியது எதெதை என்று யோசித்து பார்க்கிறேன் .

 வண்ணப் படம் ஆரம்பக் காட்சி மிகவும் அழகு .  சம்போ மகா தேவா ...நந்தி , பூத கணங்களுடன். பாடல் காட்சி  மனதைத்தொட்டது .என்னைக் கவர்ந்த ஒன்று .

கே. பி. சுந்தராம்பாள் ...காட்சிகள் முதன்மையாக எனது இதயத்தை தொட்டன . கனி சம்பந்த வசனங்களும் ,  பழம் நீயப்பா ... பாடல்களும் ...நான் தலையசைத்து ரசித்தேன் .  '  ஆறுவது சினம் , கூறுவது தமிழ் ..." வரிகளில் ஒரு ஆளுமையை காட்சிக்கேற்ப அழகுற அமைந்தது கண்டு ரசித்தேன் .  நக்கீரன் , தருமி வசனம் , சிவ பெருமான் தருமி ..காட்சிகள் இன்றைக்கும் தனி சிறப்பு . எ.பி. நாகராஜன்  நக்கீரன் நடிப்பில் ஒரு அமைதியான கம்பீரம் கண்டேன் .  இறுதியில் சிவாஜி ..பாலையா  ...காட்சி என்னை மிகவும்  ரசிக்க  வைத்த ஒன்று . 

பாட்டும் நானே ...பாவமும் நானே ... பாடல் அனைத்திற்கும் முத்தாய்ப்பு ஆனது . அத்தனை பாடல்களும் அருமை கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .  டி.எம்.எஸ். , சுசீலாம்மா , ஜானகியம்மா , சீர்காழி கோவிந்தராஜன் , டி ஆர். மகாலிங்கம் , பாலமுரளி கிருஷ்ணா , பி.பி. ஸ்ரீனிவாஸ் ...அத்தனைபேரும் கே பி எஸ் பாடல்களுடான் பவனி வந்தது ...ஒரு அருமையான உணர்வைத் தந்தது என்றும் சொல்லலாம் .

ஒரு சின்ன நெருடல் இந்தப் படத்தில் எனக்கு உண்டு . ஓஎகே தேவர் ...சாவித்திரி , சிவாஜி சம்பந்தப் பட்ட காட்சி . யாகத்திற்கு அழைப்பில்லை .. என்ற பிரச்னை . அதில்   

.கணவன் பேச்சை மீறி தகப்பன் வீடு சென்றதால் பார்வதிக்கு கிடைத்த தண்டனை ... என்று முடிவெடுத்து பேசும் வசனம் ...இன்றைக்கும் சரியானது அல்ல என்றே  எண்ணத் தோன்றுகிறது . ஆணாதிக்க சிந்தனை அவ்வளவே . மற்றபடி  சிவாஜியின் திருவிளையாடல் ..திரைத்துறையில் முதன்மையாக என்னை பாதித்த படம் .

தில்லானா மோகனாம்பாள் ...//     சமூகக் கதை . கலைகளின் வழி ...தமிழருக்கே உரிய நாதஸ்வரம் , பரத நாட்டியம் ..கலைஞர்களிடம் மெலிதாக இழையோடிய காதல் கதை . பத்மினி அவர்களின் நாட்டியம் , சுசீலாம்மாவின் பாடல்கள்  என்னை திரும்பவும் பார்க்க .வைத்தன  இரண்டுமுறை விரும்பி சென்று பார்த்தேன் . சிவாஜி , பாலையா, பத்மினி ...ரயில் வண்டி காட்சிகள் ,  நம்பியார் மாளிகையில் நாயனா வாசிப்பு , நாகேஷின் நயமான வில்லத்தனம் ..தனி சிறப்பாக மனோரமா ..ஜில் ஜில் ராணி ...டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ....ஈஸ்வரி அம்மா குரலில் .. குரலில் பாடி ஆடி நடித்தது .. நல்ல ரசனை .  புதுமையை நோக்கி நகர்ந்த காலத்தில் பழமையைப் பாராட்டி வெற்றி கண்டா படம் . கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .

உலகம் சுற்றும் வாலிபன் .. //         மூன்று முறை அடுத்தடுத்து பார்த்தேன் .  ஒரு உண்மை எனக்கு புரட்சி நடிகர்  கதையில் ... எப்போதுமே எதையும் வென்றெடுக்கும் குணம் பரவலாக இருப்பதை ரசிப்பேன் . அது இந்தப் படத்தோடு முடிந்தது . இதன்  பிறகு அவ்வளவாக நான் ரசிக்கவில்லை .  அன்றைக்கு இந்திப் படங்களுக்கு மட்டுமே  வ ண்ணப் படங்கள் , மற்றும் வெளிநாடுகளில் எடுக்கும் அனுமதி எளிதாக கிடைத்த வேளையில் , தமிழ் படங்களில் ஒரு தேக்க நிலை உருவாயிற்று . அது இசையிலும் பாதித்தது . இந்த சூழ்நிலையில் எம்.ஜி. ஆர்.  அவர்கள் நல்ல செலவில் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்தார் .  இரண்டு வேடங்களில்  அவருக் . கேற்ற கதையில் ஜனரஞ்சகமாக எடுத்திருந்தார் . ஜப்பானில் நடை  பெற்ற  உலக சந்தையை ..." உலகம் .. உலகம் .' பாடலில் அழகுற காண்பித்திருப்பார் .

தாய்லாந்து நடிகை ஒருவர் நடித்திருப்பார் . அவரது கொஞ்சும் தமிழ் என்னை வியக்கவைத்தது . வித்தியாசமான அவர் பங்களிப்பு மனம் கவர்ந்த ஒன்று . " பச்சைக்கிளி ...முத்துச்சரம் ..முல்லைக்கொடி யாரோ .."  பாடலில் அந்த ஊர் இசையும்  பயின்று வந்திருக்கும் . இவ்வளவு செலவிற்கும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில்  அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்து  பெரும் வெற்றியைத் தந்தன என்றால் அது மிகை இல்லை .

 இதற்குமுன் இத்யாதி சங்கதிகளை இந்தப்பெற்று இந்திப் படங்களே முன்னணியில் நின்று மக்களைக் கவர்ந்த நிலையில் , வடஇந்திய பெரும் கலைஞர்களும் இதில் கையாண்ட தொழில் நுட்ப படப்பிடிப்புகளை பாராட்டி வியந்து சென்றனர் .  இது எம் ஜி ஆர்    தமிழ்த் திரைக்கு ஒரு விளம்பர அளவில் அளித்த பெரிய  பங்களிப்பு என்றே சொல்லலாம் .

அன்றைய உணர்வுகள் அப்படியே இங்கே .

கோதை தனபாலன்




Saturday, September 15, 2018

ஒரு சொல் ஆளுமை


ஒரு சொல் அல்லது தொடர்  எடுத்தாளுமை  நம் தமிழ்த் திரைப் படப் பாடல்களில் நிறைய உண்டு.சமீப காலங்களில் எடுத்தாளுமைபற்றி இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

ஆசை.

ரோஜா படம் எடுத்தால் சின்ன சின்ன ஆசை ஓடி வரும் வைரமுத்துவின் வரிகளில் , முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை....  அந்த அளவிற்கு நுணுக்கமாய் ஆசைகளை பகுத்தறிந்து சொல்லியிருப்பார்.

ஒற்றை நாணயம்

ஆனந்தம் படத்தில், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை    நாணயம் ..  என்று அவ்வண்ணம் காணும் ரூபங்களை அடுக்கிச் செல்வார்

ஞாபகம் வருதே

ஒரு இளமைக் கால நினைவுகளை அடுக்கடுக்காய் ,நல்ல ரசனையோடு 

ஞாபகம் வருதே ..என்று ஒரு நல்ல ஏக்கத்தின் பிரதி பலிப்பாய் கொண்டுசெல்வார். '.... ஞாபகம் வருதே முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு,
 முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு... பழகிய நீச்சல், 'பழகிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்.....     என்று வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாண்டி வந்த அனுபவங்கள் கோர்த்து சொல்லப் பட்டிருக்கும்

ஞாபகங்கள்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உள்ளபடியே ஞாபகங்கள் தாலாட்டிச் செல்லும் , ' ஏதோ ஒரு பாட்டு ..என்ற பாட்டில்
கேட்டேன்

அமர்க்களம் படத்தில் ...சத்தம்  இல்லாத தனிமை கேட்டேன்  ..பாட்டில் விரக்திகள் வாழ்வில் ஒருவனுக்கு எப்படியெல்லாம் வருமோ அவையெல்லாம்  பட்டியல் போடப் பட்டிருக்கும். '........சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன்,  சின்ன வயதில் புத்தகம் கேட்டேன்......'   இவை போராட்டக்காரனின் விரக்தியை என்ன நேர்த்தியாய் உரைக்கின்றன. 
http://www.youtube.com/watch?v=6cStcpd_pe4&feature=player_detailpage

ஒரு சொல் ஆளுமை


ஒரு சொல் அல்லது தொடர்  எடுத்தாளுமை  நம் தமிழ்த் திரைப் படப் பாடல்களில் நிறைய உண்டு.சமீப காலங்களில் எடுத்தாளுமைபற்றி இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

ஆசை.

ரோஜா படம் எடுத்தால் சின்ன சின்ன ஆசை ஓடி வரும் வைரமுத்துவின் வரிகளில் , முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை....  அந்த அளவிற்கு நுணுக்கமாய் ஆசைகளை பகுத்தறிந்து சொல்லியிருப்பார்.

ஒற்றை நாணயம்

ஆனந்தம் படத்தில், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை    நாணயம் ..  என்று அவ்வண்ணம் காணும் ரூபங்களை அடுக்கிச் செல்வார்

ஞாபகம் வருதே

ஒரு இளமைக் கால நினைவுகளை அடுக்கடுக்காய் ,நல்ல ரசனையோடு 

ஞாபகம் வருதே ..என்று ஒரு நல்ல ஏக்கத்தின் பிரதி பலிப்பாய் கொண்டுசெல்வார். '.... ஞாபகம் வருதே முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு,
 முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு... பழகிய நீச்சல், 'பழகிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்.....     என்று வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாண்டி வந்த அனுபவங்கள் கோர்த்து சொல்லப் பட்டிருக்கும்

ஞாபகங்கள்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உள்ளபடியே ஞாபகங்கள் தாலாட்டிச் செல்லும் , ' ஏதோ ஒரு பாட்டு ..என்ற பாட்டில்
கேட்டேன்

அமர்க்களம் படத்தில் ...சத்தம்  இல்லாத தனிமை கேட்டேன்  ..பாட்டில் விரக்திகள் வாழ்வில் ஒருவனுக்கு எப்படியெல்லாம் வருமோ அவையெல்லாம்  பட்டியல் போடப் பட்டிருக்கும். '........சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன்,  சின்ன வயதில் புத்தகம் கேட்டேன்......'   இவை போராட்டக்காரனின் விரக்தியை என்ன நேர்த்தியாய் உரைக்கின்றன. 

http://www.youtube.com/watch?v=6cStcpd_pe4&feature=player_detailpage


 
கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 43
ஒரு ஆன்மீக ரசனையில் கண்ணதாசன் பாடல்... அன்றிலிருந்து இன்று வரை பொருள் நயத்தின் சுவை எவ்வளவு எளிமையான பதங்களில் ..சீர்காழியார் குரலில் அச்சரமாக , திருவருட் செல்வரில் .. இன்னிசைத் திலகம் இன்னிசையில் ஒலித்து வருகிறது..! பாடல் கேட்கிறது என்றால் முழுமையாகக் கேட்ட பிறகே அவ்விடத்தை விட்டு அகலச் சொல்லும்.
தன்னையே நினைந்து தரிசிக்க விரும்பும் அடியாருக்கு. .. காட்சி தரும் பொருட்டு சிவன் கிளம்பி வருகிறார். அவ்வாறு வருகையில் மகிழ்ச்சியின் ஒரு அம்சமாக தன்னையே ...தாழ்த்திக் கொண்டு.. அதாவது உண்மையை வேடிக்கையாகச் சற்று திரித்துச் சொல்லி... தன்னைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறாரே...
என்ற வண்ணம் இப்பாடல் புனையப்பட்டுள்ளது.
' இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் .. ஞானத்தங்கமே!
அவர் ஏதும் அறியாதவரடி ஞானத்தங்கமே !
ஞானத்தங்கம்.. என்பதே பிரியமாக சித்தர்கள் அடியார்கள் தங்கள் பாடல்களில் ..ஒருவரை அழைத்துக் கொள்ளும் முறை. அப்படி இங்கே சிவனே ..அப்பரை விளிக்கிறார்.. சொல்கிறார்....
சிவன் இருக்கக் கூடிய இடங்களை விட்டு விட்டு... எங்கெங்கோ ஏன் தேடி அலைகிறார்கள்... ?
இனி தான் வஞ்சப்புகழ்ச்சியில் இறங்குகிறார்.. விந்தை. அழகு நடை ..பொருள் சூட்சுமம் ரசித்து ..மனம் வியந்து நிற்போம்.
'உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தானுரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே..
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே !
' நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்.. ஞானத்தங்கமே!
அவன் நாடகத்தை என்ன சொல்வேன்
ஞானத்தங்கமே !
மேலோட்டமாக ... விஷமதியை மனதில் கொண்டு வாயினிக்க பேசி நடிப்பவன் சிவன்.. இவனை நீ காணவேண்டுமா.. வேடிக்கையான வார்த்தைப் பிரயோகம்.
ஆனால் உட் பொருள்... விஷத்தை தேவர்களுக்காக அண்டு ..பார்வதியால் கழுத்திலேயே வைத்துக் கொண்ட நீலகண்டன் .. அவனே உலக நாடகத்தை
நடத்துபவன் ... இனம் கண்டுகொள்.
சித்தர் தமிழ்ப்பாடல்கள் அவர்க்குத் தந்த ..சொல்லாற்றல்.
அடுத்து ,
' தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான் .. கண்டு கொள்வாய்
அவனை ஞானத்தங்கமே..
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே !
பிள்ளையைக் கிள்ளிவிட்டுத்
தொட்டி லை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத்தங்கமே!
அவன்தான் தரணியைப் படைத்தாண்டி
ஞானத்தங்கமே!
ஊரில் சேவை சேவை என்று அடுத்தவர்க்கு உதவி விட்டு ..தானே சிக்கலில் மாட்டி .. மற்றவர் உதவி நாடும் வகையில் கேலிக்கு ஆளாவான் அந்த சிவன்... இவன் திறத்தைப் பார்த்துக் கொள்.
உட்பொருள்... தன்னை நினைத்து தவம் இருந்தவர்க்கெல்லாம் மனம் இரங்கி ..கேட்கும் வரம் அளித்து... பின் அவர்களாலேயே துன்பப் படுவது.
இங்கு செட்டி நாட்டில் அன்று வேடிக்கையாகப் பேசும் பழக்கம் உண்டு.
சிவபெருமான் ஏமாந்து வரங்களை அள்ளித் தரவேண்டியது... பெருமாள் அவதாரம் எடுத்து காப்பாற்ற வேண்டியது.
இது புராணக்கதைகளில் பரவலாகக் காணப்படும். அதுவே இங்கு சுவைபட ச் சொல்லப்பட்டு ள்ளது..
இறுதியில் கவியரசர் சொல்லும் சேதி..
தரணியைப் படைத்த கடவுள் அவனே...சிவனாகி நின்றவன்..வேடிக்கையாக
பிள்ளையைக் கிள்ளி விட்டு .. வீழ்ந்துபட விடாமல் .. காத்து நிற்கும் குணத்திலே..கடவுள் பாதி...
மீதி நம் யூகத்திற்கு... அது நாம் ஞான முக்தி பெறும் வழி
பாடல் ஒரு பக்தி ரசம்.. தமிழுக்கே உள்ள தனி நடையில்..