Search This Blog

Tuesday, October 2, 2012

Director Sridhar


திரைப் படம் என்றாலே ஏதோ ஒரு கதை, பாடல், சண்டை ,சுபம் என்ற அளவுகோலே மேலீட்டிருந்த காலத்தில் , சில உன்னத உணர்வுகளுக்கே மதிப்பளிக்கும்படி கதை அமைத்து , படம் முடிந்தும் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்திய முதல் பெருமை, டைரக்டர் ஸ்ரீரிதருக்கே பொ
ருந்தும். இந்தவகையில் நான் முதன் முதலில் அவரைஅடையாளம் கண்டது 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில்தான். அந்த சிறு வயதில் கல்யாணகுமார் மேல் பரிதாபமும் ,தேவிகா மேல் வெறுப்பும் வரும். பின்னாளில் தேவிகா ,சொன்னது நீதானா...பாடலில் உருக்கம் புரிந்தது. நிழல்படத்தை மறைத்து வைக்கும் தவிப்பும் என்ன அழகாக எடுதிருந்திருக்கிறார். இதன் பிறகே கல்யாணப் பரிசு பற்றி அறிந்து கொண்டேன். சரோஜா தேவி தன அக்காவின் ஊமைக் காதலுக்கு காதலனை தியாகம் செய்து, இறுதியில் அவனும் தனிமரமாய், தங்கள் குழந்தையை அவரிடமே அவரது திருமணப் பரிசாய் அ ளிப்பது.... காவியத்தன்மை அன்றி வேறேதுமில்லை. அதுவும்...பள்ளி இறுதி ஆண்டில் தேர்வில் ஏதோ ஒரு சினிமா விமரிசனம் நல்ல கதையோடு கேள்வி கேட்கப்படும் வழக்கம் இருந்தது. பெரும்பாலும் எல்லா கைடுகளிலும் இந்தப் படத்தின் விமரிசனமே தந்திருக்கப்படும். அந்தக் கதையின் நேர்த்தி என்று பின்னாளில் புரிந்தது. விட்டுக்கொடுத்த பண்பு மூலதனமாகக் கொண்ட கதை என்றால் அவ்வப் பொழுது எழும் உணர்வு போராட்டங்களைச் சித்தரிப்பது எளிதல்லவே. அதை இவர் செய்தார். அதுமட்டுமல்ல தமிழ்க் கதைக்கே உண்டான வகையில் நியாயத் தீர்ப்பும் கதைகளில் ,சொல்லிவரும் அழகில் கண்டிருப்பார். கலைக்கே அர்பணிப்பாக மீண்ட சுவர்க்கம், கலைக் கோயில் படங்கள் தோல்வி கண்டாலும் பாடல்கள் அனைத்தும் எல்லாக் காலங்களிலும் எல்லார் மனதிலும்.அசைபோடுபவன . இவருக்கு உருகவைக்கத்தான் தெரியும்...என்ற பெயரை தேனிலவு...நகைச்சுவையாய் காஷ்மீர் பின்னணியில் அழகுற எடுத்தது தகர்த்தது. காதலிக்க நேரமில்லை....நான் அதிகம் சொல்ல வேண்டாம்...இன்றும் வெற்றியில் உள்ளதே. அவளுக்கென்று ஓர் மனம் சுமார். பின்னாளில், இவர் வழக்கம் போல் சில கலைஞரைப் போல் கஷ்டப் பட்ட நிலையில், உரிமைக்குரல் எம்.ஜி.ஆர்.ஐ வைத்து எடுத்து கடன் மீண்டார். புதுமுகங்கள் , காஞ்சனா, ராஜஸ்ரீ, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, ரவிச்சந்திரன், இன்னும் இருக்கலாம். நாகேஷ் நெஞ்சில் ஓர் ஆலயம் பின்னரே பிரபலம் ஆனார். வெண்ணிற ஆடை ஜெயலலிதாவிற்கு முதல் படமே வெற்றிப் படம் என்றாயிற்று.இவரது சித்ராலயா பல காவியப் படங்களைத் தந்தது என்றால் மிகை இல்லை.

Sunday, September 30, 2012

L.R.ESWARI






 தமிழ்த்திரை உலகில் குரல் இனிமைக்கும் , தெய்வீகத்திற்குமாய்  ஒருவருக்கொருவர் போட்டி இருக்கும் கட்டத்தில்  தனக்கென்று தனித்துவமான கவர்ச்சியின் அச்சாரதுக்கான குரல் வளத்தோடு ஒரு தனி இடத்தை தனக்கென்று தக்க வைத்துக் கொண்டவர் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால் மிகை இல்லை. பெரும்பாலும் சுசீலாவோடு துணைக் கதாநாயகிக்காகவே இவரது பாடல்கள்  கணிசமான  வெற்றி அடைந்தது.   பாத காணிக்கையில் , 'பூஜைக்கு வந்த மலரே வா...'. பச்சை விளக்கில், ' தூது சொல்ல ஒரு தோழி இல்லை என ....',  இருமலர்கள் ,'கடவுள் தந்த இருமலர்கள், எங்க வீட்டுப் பிள்ளையில் ,'மலருக்குத் தென்றல் பகையானால் ....'  இப்படியே போனால் அட்டவணை நீண்டுவிடும். தனியாகவும் இவரை பாடல் வைத்து எம்.எஸ்.வி. வெற்றி கண்டார். இனிமைக்கு ,'இரத்தத் திலகத்தில், 'வாடைக் காற்றம்மா...',கறுப்புப் பணத்தில் , 'அம்மம்மா கேளடி தோழி....', பின்னர் கோஷ்டி கானமாக , நன் ஆணையிட்டால், 'பிறந்த இடம் தேடி ...', கண்களும் காவடி சிந்தாகட்டும்....எங்க வீட்டுப் பிள்ளை யில் அழகாக அமைந்தது. பணமா பாசமா வில்.....'எலந்தப் பயம்...பாட்டு அமர்க்களமானது, நாட்டுப் புறச் சாயலில் கவர்ச்சியான இசையும் சேர்ந்து அந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்ற இசைத் தட்டு என்ற பெருமையும் தட்டிக் கொண்டது. வேதா  தன் பங்கிற்கு , மேற்கத்திய இசைக்கு இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். வல்லவன் ஒருவனில்....'அம்ம்மம்மா கன்னத்தில்....', வல்லவனுக்கு வல்லவனில் சீர்கழியோடு கண்டாலும் கண்டேனே ....' இது போன்று பல. இந்த வெற்றிகளைப் பார்த்து , வெகுளிப் பெண்ணில் , ஆனால் சற்று மென்மையான, 'காதோடுதான் நான் பாடுவேன்..' அடைந்தது வெற்றி. சிவந்த மண்ணில், 'பட்டத்து ராணி.. இவருக்கென்றே அமைந்த வெற்றிப்பாடல். ' நான்' திரையில், கம் செப்டெம்பர்  ட்யூன் ,வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே......மறக்க முடியாததாயிற்று.தரிசனம்,'இது மாலை நேரத்து மயக்கம்....பாடலில் சரியான பாவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.  தெய்வப் பாடல்....மாரியம்மன் பாடல்கள் இவர் பாடியவை இடம் பெறாத ஒலிபெருக்கிகளே கிராமத்தில் இன்னும் இல்லை  எனலாம். வெண்ணிற ஆடையில் இவர் பாடிய நீ என்பதென்ன ,நான் என்பதென்ன ...சற்று சிரமப்பட்டே பாடப் பட பாடல் என்று சொல்வர். ' வந்தால் என்ன...ஒஒய் எனக்கும் வந்த இந்த மயக்கம்.....'  உண்மை ,இவர் பாடல்களில் ஒருவித காந்த ஈர்ப்பு இருப்பது உண்மை.

Wednesday, August 22, 2012

நடிகவேள் எம்.ஆர்.ராதா .

நடிகவேள் எம்.ஆர்.ராதா .




தமிழ் திரைப்பட உலகில் ,தனக்கென்று ஒரு பாவம் , தனி வழி, சிந் தனையிலும் சரி  பேச்சுத்திறத்திலும் யாரும் சார்ந்திடாத ஒரு போக்கை தமக்கென்று வைத்துக் கொண்டு வெற்றியுடன் தமிழ்த் திரைவானில்
நடிகவேள் எம்.ஆர்.ராதா .பரிமளித்தவர் என்றால் மிகையில்லை. அதுதான் உண்மை.  திராவிட கழக இயக்கத்தவர் ஆதலால் சமுதாய மூட நம்பிக்கைகளைக் கடுமையாக  தன்  வசனத்தில் எப்படியேனும் அள்ளி வீசுவார்; அது  பலன் அளித்தது என்றால் அதுவும் உண்மை. இத்தனைக்கும் அவர் ஒரு நல்லவராகவோ, கதானாயகராகவோ வேடம் ஏற்பதில்லை .நகைச் சுவை வில்லனாகவே பெரும்பாலும் வருவார் .அப்படியிருந்தும் இது சாத் தியமான தென்றால் அவர் சிந்தனையிலும்,பேச்சுத்திறத்திலும் அபார சக்தி இறந்ததை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
 இரத்தக் கண்ணீரில்  மேல்நாட்டு நாகரிகத்தில்  மூழ்கி நம் நற்பண்புகளைப் பழிப்பார். ஆனால் அதைக் கேட்கும் நாம் சிரிக்கத்தான் செய்வோம்;ஆனால் கோபப்படமாட்டோம். அதனூடே சாத்திரம் பொய் என்று மூட நம்பிக்கையைத்  தூற்றும் இளக்காரம் நம்மிடம்  உறைக்கத்தான் செய்யும்; அந்த முயற்சி  வெற்றியும் கொண்டது.  பலே பாண்டியாவில் நகைசுவையாக ,மாமா மாப்ளே ...என்று சிவாஜியுடன் அடிக்கும்  கொட்டம் இன்றும் போற்றத் தகுந்தது.
ஹலோ மிஸ்டர் ஜமீந்தாரில் ...'சொந்தமுமில்லே   ஒரு பந்தமுமில்லே ,சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறான்...'என்று சலூனுக்கு வருபவரின் செயல் பாடுகளை நயமான நகைச்சுவையுடன் அவர்  பாடிக் கழிப்பதை எப்படி மறப்பது. வில்லத்தனமான  நடிப்பு பெரும்பாலும் எம்.ஜி.ஆர். உடன்தான்.நிஜ வாழ்விலும் அது எதிரொலித்தது ஏனோ  தெரியவில்லை. வில்லன் என்றால் அடிதடி வில்லனாய்   அதிகம் இடம்பெறாது ,சதித் திட்டம் போட்டே ,முகத்தை இருளடங்கியது போன்று மாற்றிக் காண்பிப்பது இவருக்கே கைவந்த கலை. நகைச் சுவை, வில்லத் தனம் ,  குணசித்திரம், தனித்திறம்  கொண்ட இவரது பேச்சு ஆக எல்லாவற்றிலும் தன சுய சிந்தனையாய் மூட நம்பிக்கைகளைச் சாடி விஞ்ஞானத்தைப் போற்றத் தவறியதில்லை. இன்னும் ஞா பக்கத்தில் நிறைய உண்டு...இன்றைய தலை முறையினர் அது பற்றி தெரிந்திருப்பரோ என்ற சந்தேகம் எழவே இக்கட்டுரையும் பிறந்து விட்டது.

Tuesday, June 26, 2012

அனுபவ முத்திரைகள்: சீர்காழி கோவிந்தராஜன்

அனுபவ முத்திரைகள்: சீர்காழி கோவிந்தராஜன்:   சீர்காழி கோவிந்தராஜன்     அன்றைய காலத்தில் ,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல...

சீர்காழி கோவிந்தராஜன்

 சீர்காழி கோவிந்தராஜன்
Photo: சீர்காழி கோவிந்தராஜன் 

அன்றைய காலத்தில் ,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல தெய்வப் பாடல்கள்  தந்தவர். இவர் தமிழ் திரை வானிலும் பல இன்னிசை பாடல்களை நமக்குத் தந்தவர். எனக்குத் தெரிய இவரது முதல் திரைப் பாடலாய் நான் ரசித்தது , ‘அமுதும் தேனும் எதற்கு ...’ தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில். உயரிய ராகத்தில் ,தெளிவான உச்சரிப்பில் , கணீரென்று அன்று பாடியது இவர் ஒருவரே. அந்த இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். பிறகு வரிசையாக, ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ... ‘ நல்லவன் வாழ்வானிலும், ‘தங்கக் கிளியே மொழி பேசு ...’ வீரக்கனல், ‘செங்கனிவாய் திறந்து சிரிதிடுவாய் .....’இது, யானைப் பாகனில்.. தத்துவப் பாடலாய் ,’ உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதேங்கே சொல் என் தோழா.....’ மன்னாதி மன்னன்.; ’சமரசம் உலாவும் இடமே...’ ரம்பையின் காதல். ‘சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்....‘ சபாஷ் மாப்பிள்ளே, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா...’நீர்க்குமிழியை  மறக்க முடியுமா....!  நாட்டுப் பாடல்களை திரையில் இவர் பாடிய, ‘ ஆத்துல தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க, ,காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன் கண்ணம்மா! ...வண்ணக் கிளியிலும், ‘பட்டணந்தான் போகலாமடி... ’எங்க வீட்டு மகாலக்ஷ்மியில் பாடிக் களித்தவர். ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே .,கண்ணே  என் தாரகையே கண்ணு றங்காயோ....’யானை வளர்த்த வானம பாடி ...நெஞ்சை இன்னும் தாலாட்டுகிறது. அறுபடை வீடு கொண்ட.....முருகனைத் தொடர்ந்து , கர்ணனைக் கொன்ற பாவியாய் கண்ணபிரானை மனம் உருகிபாடச் செய்த  ,’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது......  இவர் பாடல்களை கேட்பவர்க் கெல்லாம் விளங்கும்.
‘தொட்ட இடம் துலங்க வரும்  தாய்க் குலமே வருக......பாடல், ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி......இவர்தம் பாடல் மனதில் நிழலாடாத நெஞ்சமில்லை. 



 

Monday, June 25, 2012

அனுபவ முத்திரைகள்: எம்.எஸ்.விசுவநாதன்

அனுபவ முத்திரைகள்: எம்.எஸ்.விசுவநாதன்: எம்.எஸ்.விசுவநாதன் முதன் முதலாய் இந்தப் பாடலை இசையமைத்தவர் யார் என்று நான் கேட்டறிந்தவர் இந்த எம் எஸ் வி . படம் பாலும் பழமும். பாடல் ....

எம்.எஸ்.விசுவநாதன்



எம்.எஸ்.விசுவநாதன்


முதன் முதலாய் இந்தப் பாடலை இசையமைத்தவர் யார் என்று நான் கேட்டறிந்தவர் இந்த எம் எஸ் வி . படம் பாலும் பழமும். பாடல் ....'பாலும் பழமும் கைகளில் ஏந்தி ....' 'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன். பின்னர் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா ...'எனக் கேட்டு ,'அன்று ஊமைப் பெண்ணல்லோ ,இன்று பேசும் பெண்ணல்லோ...என வீச்சு நடை போட்டது. இவருக்கென்று தனி சூத்திரம் ஒன்றை இவர் பாடல்களைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அறியலாம். ஒரு கிராமத்து பாடல் மெட்டை மூலதனமாகக் கொண்டு, அதற்கு தானறிந்த ராகங்களை பல வண்ணக் கலவையில் சேர்த்து அன்றைய நவீன இசை சேர்த்து பல பாவங்களில் பாடல்களை வெளிக் கொணர்வார். 'தாழையாம் பூமுடித்து ...' 'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு....'
சரி, முற்றிலும் நவீன இசை பாவத்துடன் பாடல் கேட்டவருக்கு ,'கேட்டவறேல்லாம் பாடலாம் என் பாட்டுக்குத் தாளம் போடலாம்....'
உயர்ந்தமனிதனில்,' நாளை இந்த வேளை ....'சுசீலா அம்மையாருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தது. கர்ணன் படப் பாடல்களில்...எதைத்தான் விடுவது....?உள்ளத்தில் நல்ல உள்ளம்...'அல்லவா. தங்கப் பதக்கத்தில், அன்றையஇந்திப் பாடல்கள் தாக்கத்தையும் மீறி, 'நல்லதொரு குடும்பம்,பல்கலைக்கழகம்...', அடி ராக்கு என் கண்ணு.,என் மூக்கு....' பாடல்கள் கேட்பவரை இன்னும் தாளம் போடா வைக்குமே. உலகம் சுற்றும் வாலிபனில் கர்ணன் போன்று அத்தனையும் நவீன இசை அமைப்பில் மறக்க முடியாதன ஆயின.'பச்சைக் கிளி ,முத்துசரம்.முல்லைக் கோடி யாரோ...' தத்துவப் பாடலா ...சட்டி சுட்டதடா கை விட்டதடா ...என்றெல்லாம் பாடல் தந்து ,'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ..'என்றும் சொன்னவர்தாமே..அபூர்வ காதலை அபூர்வ ராகங்களில் அதிசயமாய், நளினமாய் கவியரசு பாடல் 'அதிசய ராகம் ஆனந்த ராகம்..... 'காதில் ரீங்காரமாய் இன்றும் அல்லவே ஒலிக்கிறது. இந்த இன்னிசை மன்னர் அந்த வெண்கலக் குரலோனுக்கு உற்சாகமாய் தந்த பாடலை யார்தான் கேட்காமலிருப்பர்.....ம்ம்ம் இன்னும் சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.......



http://www.youtube.com/watch?v=A2Dq4CzZLaQ






Friday, June 22, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்: கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார். வானம் பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்ட...

Monday, June 18, 2012

அனுபவ முத்திரைகள்: இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்...

அனுபவ முத்திரைகள்: இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்...: கலித்தொகையில் உள்ள காதல் பாட்டுக்கள் நல்ல சொல்லோவியங்களாயும் இனிய ஓசைநயம் உள்ளவையாகவும் உள்ளன, தான் கைப் பிடித்த காதலனுடன் வாழ சென்றுவிட்...

இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்.......


கலித்தொகையில் உள்ள காதல் பாட்டுக்கள்
நல்ல சொல்லோவியங்களாயும் இனிய
ஓசைநயம் உள்ளவையாகவும் உள்ளன,
தான் கைப் பிடித்த காதலனுடன் வாழ சென்றுவிட்ட மகளை
நினைத்து கலங்கும் தாய் ஒருத்திக்கு பெரியவர் இவ்விதம் ஆறுதல் சொல்கிறார்...

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுமே பிறப்பினும் மலைக்கவைதான் என்செய்யும்
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே .

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்
தேருங்கால் நுமக்கும் நும் மகள் அலைய ளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுமே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்
சூழங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ..

சுருக்கமாக , ஒன்றில் பிறந்த ஒன்று அதற்கு பயன்படாது இருத்தல்
ஒரு இயல்பே என்று அவளுக்கு அறிவுறுத்துகிறார்.

மலையின் சந்தனம் நாம் பூசிக்கொள்ளவன்றி மலைக்கல்ல

கடல் தரும் முத்து நாம் அணிய அன்றி கடலுக்கல்ல
யாழிலிருந்து இசை பிறந்தால் அது மற்றவர் கேட்பதற்கே அன்றி யாழுக்கல்ல.

இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்.......
http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y  

அந்த சிவகாமி மகனிடம் - Antha sivagami maganidam
www.youtube.com 
Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned b...

Wednesday, June 13, 2012

அனுபவ முத்திரைகள்: சாவைப்பற்றி பாடும் சாகாவரத் தமிழ் பாடல்கள்

அனுபவ முத்திரைகள்: சாவைப்பற்றி பாடும் சாகாவரத் தமிழ் பாடல்கள்: சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய் அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்...

சாவைப்பற்றி பாடும் சாகாவரத் தமிழ் பாடல்கள்


சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண
்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
... பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!
சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!

http://www.youtube.com/watch?v=Gk5sNk-2USU 

Monday, May 28, 2012

அனுபவ முத்திரைகள்: அன்றும் இன்றும் ஒன்றே போல்

அனுபவ முத்திரைகள்: அன்றும் இன்றும் ஒன்றே போல்: தமிழ் திரைப் பாடல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள சில மனித இயல்புகள்,உணர்வுகள் இவற்றை கூர்ந்து கவனித்தால் அன்றும் இன்றும் ஒன்றே போல் ஏற்றுக்...

அன்றும் இன்றும் ஒன்றே போல்

தமிழ் திரைப் பாடல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள சில
மனித இயல்புகள்,உணர்வுகள் இவற்றை கூர்ந்து கவனித்தால்
அன்றும் இன்றும் ஒன்றே போல் ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை
நாம் உணரலாம்.'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'
மலைக்கள்ளனில் வரும் பாடல் தரும் கருத்துக்களை இன்றும் மறுக்க முடியாது..
பராசக்தி படத்தில்,'தேசம் ஞானம் கல்வி பாடலில்....
முட்டாப் பயலை எல்லாம் காசு முதலாளி ஆக்குது....' உண்மைதானே.
'கடவுள் ஏன் கல்லானர் ....என்று ஒரு பாடலில் சொல்லி...'தெய்வம் என்றால் அது தெய்வம்..
சிலை என்றல்வெறும் சிலைதான்.. உண்டென்றால் அது உண்டு ..இல்லை என்றால் அது இல்லை.
இன்றும் பலரிடம் வேண்டும்போது இறையுணர்வு வருகிறது...தேவை இல்லை என்றால் போய்விடுகிறது.
மனசாட்சிக்கு தமிழில் மதிப்பு அதிகமே.'நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் இரண்டு,ஒன்று மனசாட்சி;ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா..நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா..
அதுதான் உண்மையின் சாட்சியம்மா..!அற்புதமான விளக்கம்.தெளிவான சிந்தனை கொண்டவர்க்கும்,
ஆற்றல் உள்ளவர்க்கும் ,'மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்,அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் .....
கடமை அது கடமை....!நிதானமான உள்ளம் விரும்புவர்க்கு ஒரு அருமையான பாடல்,
'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.....' வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் ...என்று சாந்தப் படுத்தும் பாடலும் உண்டு. மரணம் பற்றி....வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா...!
'செய்யும் தொழிலே தெய்வம் ..அதன் திறமைதான் நமது செல்வம்....' என்றும் வாழும் நெறிமுறையும்
நேருறுத்தி வைக்கப் பட்டது. ',
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதுண்டோ...என்று பக்குவப் படுத்தி இன்று ,
'ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுதே ..வாழ்வென்றால் போராடும் போர்களமென்று...வெற்றி காண வைக்கிறது.


http://www.youtube.com/watch?v=c6msmJL6BUQ 

ovoru pookalume solkirathe
www.youtube.com

Thursday, May 3, 2012

அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....

அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....: தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள் கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன. எம்.கே. திய...

அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....

அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....: தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள் கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன. எம்.கே. திய...

நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....

தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள்
கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் ,எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் தங்கள் இனிய குரல் வளத்தால்
அற்புதமாக பாடி திரை உலகில் ப...
வனி வந்தனர். பின்னர் மெதுவாக ஐம்பதுகளில் என்று சொல்லலாம் ,
கே. வி. மகாதேவன் போன்றோர் இசையமைப்பில் அன்றைய கிராமத்துப் பண்கள் இனிமையாக அரங்கேறின.
இனிய தமிழும் நடை பயில துவங்கிற்று எனலாம்.எம்.எஸ். விசுவநாதன், டி. கே. ராமமூர்த்தி இசைஅமைப்பில்
அடித்தளத்தில் கிராமப்புற மெட்டுடன் சற்று கர்நாடக இசையும் கலந்து நவீன இசை அமைப்பில்
அதி அற்புதமாக பாடல்கள் மட மடவென அரங்கேறின.கவியரசின் பாடல்களும் ,வாலி,மருதகாசி போன்றோரின்
சிந்தனை எழுச்சியுறும் பாடல்களும் அவற்றிற்கு உறுதுணை புரிந்தன என்றால் மிகையாகாது.
தமிழ் சொற்களும், இலக்கிய காட்சிகளும் மக்கள் பார்வைக்கு பெரிதும் அறிமுகமாயின.
ஒரு விளைவு யாதெனில் சமயத்தில் எல்லாப் பாட்டும் ஒன்றே போல் தோன்றும்.
பாவங்கள் மாட்டுமே உணர்சிகளில் மாற்றத்தைக் காண்பித்து பாடலைச் சற்று வேறுபடுத்திக் காட்டியிருக்கும்.
பிறகு வருகிறார் இளையராஜா. இன்றளவும் எல்லாத்தட்டு மக்களையும் தன பாடல்களால்
மனம் கவர்ந்து கொண்டிருக்கிறார். யதார்த்தமான கிராமப் பாடல்களின்
இனிய பாவங்களையும்,எளிமையான சொற்களின் ஆளுமைத்தன்மையையும்
குண்டுமணி அளவும் குறையாமல் நவீன இசை அமைப்போடு மேலும் மெருகேற்றி தந்து கொண்டிருக்கிறார்.
இவையெல்லாம் நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சியை ஒரு சமூக வளர்ச்சியாகவே காட்டி வந்துள்ளது.
வேதாவும் ,ரகுமானும் ஓரளவு தமிழில் அதைக் கடைப் பிடுத்து வருகின்றனர். வைரமுத்து பாடல்களும்
அவற்றோடு அணிசேர்ந்து வருகின்றது. இவை என்றென்றும் மாறாதது என்று நம்புவோம்.
http://www.youtube.com/watch?v=d8c2cFeUSnQ&feature=player_detailpage 
 

Saturday, April 28, 2012

அனுபவ முத்திரைகள்: திரையில் காதல் இலக்கியம் நேற்றுவரை...

அனுபவ முத்திரைகள்: திரையில் காதல் இலக்கியம் நேற்றுவரை...: இந்தக் காதல் படுத்தும் பாடு அன்றைய இலக்கியத்திலிருந்து இன்றைய திரை இலக்கியம் வரை சொல்லி மாள முடியாது. எத்தனை ஆனாலும் நினைவில் நிற்பவை ஒரு ...

திரையில் காதல் இலக்கியம் நேற்றுவரை...

இந்தக் காதல் படுத்தும் பாடு அன்றைய இலக்கியத்திலிருந்து
இன்றைய திரை இலக்கியம் வரை சொல்லி மாள முடியாது.
எத்தனை ஆனாலும் நினைவில் நிற்பவை ஒரு சிலதே.
எனக்கு நினைவில் தெரிந்த முதல் காவியம் திரையில்
தேவதாஸ். சோகம் சொல்லி மாளாது அந்த உண்மைக் காதல் கதைக்கு.
பாடல்கள் இனிமையானவை. பிறகு வெற்றி பெரும் காதலை விட
விட்டுக் கொடுக்கும் காதல் தமிழ் திரையை புரட்டி எடுத்தது.
கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், ஆலயமணி சொல்லிக் கொண்டு போகலாம்.
பாடல்கள் வெகு பொருத்தமாய் தமிழில் அமைந்து வெற்றி பெற்றதென்றால் மிகையாகாது.
ஆண் , பெண் இரு கதா பாத்திரப் படைப்புகளுமே சம கன பரிமாணத்தில் இருந்தன.
குறிப்பாக காதலை தியாகம் செய்வதில், கடவுள் தந்த இருமலர்கள், இருகோடுகள் ,
முதலியன. போராடி வெற்றி பெரும் காதல் ராஜா நாகம், அலைகள் ஓய்வதில்லை ,காதலுக்கு மரியாதை
இந்த வரிசை தந்தது கால மாற்றம். காதல் கோட்டை, காதல் ஓவியம் உள்ளபடியே நவீன பெருமையான காவியங்கள்.
ஒரு தலை ராகம் ...தனி வழியில் காதலுக்கு அணிமரியாதை செய்தது எனலாம்.
ஆனால் இப்பொழுது வருவது ...நினைக்கவே வேண்டாம்..இனிமை கெட்டு விடும்.


http://www.youtube.com/watch?v=hCladlTAOnw 
Song: Kaalamellam Kadhal / Nee kathali Movie: Kathal kottai (1996) Language: Tamil ...First song from the movie. Some of the texting overlapped part of the v...

Monday, March 5, 2012

அனுபவ முத்திரைகள்: திரையில் கிராமத்து பாடலின் பங்கு

அனுபவ முத்திரைகள்: திரையில் கிராமத்து பாடலின் பங்கு: திரை உலகின் ஆரம்ப காலக் கட்டத்தில் வட இந்திய, தென்னிந்திய திரைப்படங்கள் ஒன்றே போல் எடுக்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டன. அதுவும் ...

திரையில் கிராமத்து பாடலின் பங்கு

   திரை உலகின் ஆரம்ப காலக் கட்டத்தில் வட இந்திய, தென்னிந்திய திரைப்படங்கள் ஒன்றே போல் எடுக்கப்பட்டு  ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டன. அதுவும் பம்பாயில் மட்டுமே தலைமையிடம் செயலாற்றி , டங்கன் போன்ற ஆங்கில இயக்குனராலேயே தயாரிக்கப் பட்டதால் வசனமும், பாடலும் வட மொழி சாயலே கொண்டிருந்தன.மெதுவாக இந்தநிலை மாறி
அந்தந்த பிராந்திய மொழிகளில் திரைப்படம் உருவாக்கி வரும் காலத்தில் ,
தமிழில் 
நல்ல வளமான தமிழ் வசனமும், பாடல் பொறுத்த அளவில் பல கிராமிய பாடல்கள் அழகான,
அளவான சேர்க்கைகளுடன் வெகு இனிமையாக பவனி வந்தன.இதில் ,
கே.வி.மகாதேவனும்,எம்.எஸ் .விஸ்வநாதனும் பிரசித்தி பெற்றனர்.

நான் நினைவு கொண்டவரை     டி.லிங்கப்பா இசையில் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் 'ஆத்துக்குள்ள ஊத்து வெட்டி ..'.
அழகர்மலை கள்வனில்   'தேன் தூங்கும் தென் பொதிகை சாரலிலே... ' ,  கவலை  இல்லாத மனிதனில்,'காட்டில் கனியுறங்கும் ,கழனியிலே நெல் உறங்கும் ..'
நாடோடி மன்னனில் , 'சும்மா கிடந்த  நிலத்த கொத்தி...' பிள்ளைக் கனியமுதில் ,'ஏர்முனைக்கு நேர் இங்கர் எதுவுமே இல்லே...'
பிறகு 'மணப்பாறை மாடுகட்டி ... ' நீதிக்கு பின் பாசத்தில் ,'காடு கொடுத்த கனியிருக்கு... பாடல்களை கேட்கும்போது மனம் அள்ளிக்கொண்டு போகும்.
பாகப்பிரிவினையில் ,'தாழையாம் பூமுடிச்சு .... , தை பிறந்தால் வழி பிறக்கும் பாடல் ,சாந்து போட்டு கமகமங்க...சிவகங்கை சீமையில் , 'ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே..
நாலு வேலிநிலம் படத்தில் எவ்விதம் மறக்க இயலும். நமது நாட்டுப்புற தாலாட்டுக்கு இணை ஏதுமில்லை...அன்று மகாதேவன் 'சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா..'தொடங்கி
இன்று இளைய ராஜாவின்  'தேனே தென்பாண்டி மீனே...' தொடர்ந்து வரும் தமிழிசையின் பெருமை சாகா வரம் பெற்றது.








 கோதைதனபாலன் 



Friday, February 24, 2012

அனுபவ முத்திரைகள்: எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இச...

அனுபவ முத்திரைகள்: எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இச...: இன்று ஜானகி அன்று ஜானகி எஸ்.ஜானகி அம்மாவின் தமிழ் திரை பாடல் காலம் ஒரு வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்ட ஒரு நீண்ட அழகுற அமைந்...

எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இசையில்

 இன்று ஜானகி
  அன்று  ஜானகி
எஸ்.ஜானகி அம்மாவின் தமிழ் திரை பாடல் காலம் ஒரு வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்ட  ஒரு நீண்ட அழகுற அமைந்த பயணம் என்றே கொள்ளலாம். இந்த சிறப்பு இவர் ஒருவருக்கே சேரும். தன வெகு இளைய பிராயத்தில் பாதை தெரியுது பார் படத்தில் , 'மாசில் வீணையும் மாலை மதியமும் ...பாடி [உடன் இறுதி பகுதியில் ஜி.ராமனாதனும் பாடியிருப்பார்.] சிறப்பான இடத்தை தொட்டு, கொஞ்சும் சலங்கையில் , 'சிங்கார வேலனே தேவா ....என்று காரைக்குறிச்சி அருணாச்சல நாதஸ்வர இசையோடு அதி பிரபலமானார். 'போலீஸ்காரன் மகனில் , இவருக்கு மட்டுமே  பெண்குரல் வாய்ப்பு கொடுக்கப்பட்டு கௌரவம் அடைந்தார். ஏனோ வானம் பாடியில் ,சுசீலாவின் கங்கைகரைதோட்டம் பாடல் முன்னம் ,தெய்வத்தின் தெய்வம் படத்தில் இவர் பாடிய 'கண்ணன் மனநிலையை  தங்கமே தங்கம் ...பாடல் போதுமான வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.
இருப்பினும் எம்.எஸ்.வி.யால் அவ்வப்பொழுது  கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்தி , ஆலயமனியில்,  'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே....,     அவளுக்கென்று   ஒரு மனம்  படத்தில்,   'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ...என்றெல்லாம் பாடி அழியாத தடம் பதித்து வந்தார்.  இளையராஜா அன்னக்கிளியுடன் வந்தாரோ இல்லையோ இவரது  மறுமலர்ச்சி காலம்  பொற்காலம் என்றே சொல்லலாம்.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே .... என்று துவங்கி இன்றுவரை பெரிய  சூறாவழிப் பயணம் கொண்டார் என்றால் மிகையாகாது. பக்தி பாடலிலும் 'திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே.....,வல்லமை உள்ளமே நீதானையா....போன்ற பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.




கோதைதனபாலன்   


http://www.youtube.com/watch?v=CdHwIplFtik&feature=fvst






  

Thursday, February 23, 2012

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி: அன்று தமிழ் திரை பாடல் உலகில் M.L. வசந்தகுமாரி அவர்கள் குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தைய...

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி: அன்று தமிழ் திரை பாடல் உலகில் M.L. வசந்தகுமாரி அவர்கள் குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தைய...

M.L.வசந்தகுமாரி

அன்று தமிழ் திரை பாடல் உலகில்    M.L.வசந்தகுமாரி அவர்கள்  
குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தையே அரவணைப்பார்.
அப்படி குறித்த பாடல் அனைத்துமே அவராலேயே சிறப்படைந்தது என்றல் மிகையாகாது.
'செந்தமிழா எழுந்து வாராயோ..' மதுரை வீரன் படத்தில், 'அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி...பார்த்திபன் கனவு படத்தில்,
'ஆடும் அருள் ஜோதி ..
என்று மீண்ட சொர்க்கத்தில் கம்பீரமான குரலில்
பிசிறில்லாமல் துவங்கி நடை பயின்று, இறுதியில் கம்பீரக் குரலோன் சீர்காழி பாட்டில் இணையுமிடம் அற்புதமானது.
எல்லோர் நெஞ்சிலும் அகலா இடம் பெற்றது. 'ஆடாத மனமுமுண்டோ,நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு...
என்று மன்னாதிமன்னனில் டி .எம்.எஸ். டன் பாடிய பாடலும் ஒரு நிகரற்ற பாடலாகும். பின்னர் திருப்பாவை முப்பதும் இவர் பாடி
வெளிவந்த இசைத்தட்டு அந்த அதிகாலை நேரத்தில் கோயிலில் ஒலிக்கக் கேட்கும் போது தெய்வ சிந்தை எங்கும் குடி கொண்டிருப்பதை அறியலாம். .

http://www.youtube.com/watch?v=1QtGTf_7Qv0

MEENDA SORGAM --- AADUUM ARUL JOTHY --- PADMINI ----M L VASANTHAKUMARI ---
www.youtube.com

Thursday, February 16, 2012

அனுபவ முத்திரைகள்: சுசிலாவின் குரல் மேன்மை

அனுபவ முத்திரைகள்: சுசிலாவின் குரல் மேன்மை: சுசிலாவின் குரல் மேன்மைபற்றி சொல்லும் போது எம்.எஸ்.வியிடம்அவர் பெற்ற பயிற்சிகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது. மிசியம்மாவில் 'அறியாப்...

சுசிலாவின் குரல் மேன்மை

சுசிலாவின் குரல் மேன்மைபற்றி   சொல்லும் போது எம்.எஸ்.வியிடம்அவர் பெற்ற பயிற்சிகளை குறிப்பிடாமல்   இருக்க முடியாது.  மிசியம்மாவில்   'அறியாப் பருவமடா..என்ற பாடல் அடுத்து வந்த பாடல்களை    கவனித்தால் இது நமக்கு புரியும். ஆரம்ப காலத்தில் தெலுங்கில் எழுதி பாடி வந்தவர்.பின்னர்   எம்.எஸ்.வியிடம்அவர்   பெற்ற பயிற்சியின் விளைவு நல்ல உச்சரிப்புடனும்,பாவங்களுடனும் பாடிவந்த  உன்னத பாடகியானார். அவர். தமிழில்  சிர்காழியுடன்  ஆரம்பத்தில் அவர் பாடிய  பாடல்கள்  இன்றும்  அமுதகானங்களாகவே   உள்ளன.  வீரக்கனல் படத்தில் ,'தங்கக்கிளியே மொழி பேசு.....,' சித்திரமே    சித்திரமே   சிரிக்கக்கூடாதா.. ,'    ஒ வண்டுனாடாத சோலையில் அமர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...,  சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ..'  நல்லவன் வாழ்வான் படத்தில் காதல் பாடல்களாக நெஞ்சில் நிறைந்தவை. சிர்காழி உச்சரிப்புக்கு இவர் உச்சரிப்பும் பிசிறில்லாமல் வரும்.   டி.ஆர்.மகாலிங்கத்துடன் பாடும்போதும் இவர் குரல் சளைக்காமல்  ஈடுகொடுத்து  மணிபிரலாவகமாக  துள்ளி வரும். மாலையிட்ட மங்கையில் ,'ஆடை  கட்டி வந்த நிலவோ ...என்று அவர் பாடி வைக்க ...இவர் குரல் '...துள்ளி துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை.....என்று பாடி வரும் இனிமையே அலாதிதான்.  சி. எஸ் ஜெயராமனுடன்...பாவை விளக்கில் பாடிய 'காவியமா    நெஞ்சின் ஓவியமா...., புதையலில் ,'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
...யாரால் மறக்கமுடியும்.   டி .எம். எஸ் உடன் பாடியது அதிகம் என்றாலும், இவர்களுடன் பாடும்போது அவர் குரல் இன்னும் சற்று மென்மையாகவே ஒலித்து அந்தப் பாடல்களுக்கு அடிமையாகி விடுகிறது என்றால் மிகையாகாது..



கோதைதனபாலன்.

 
http://www.youtube.com/watch?v=ZH0R37fyyYU


Saturday, February 11, 2012

What else gentle people do s... - All types of Poetry

What else gentle people do s... - All types of Poetry

சுசீலாவின் தேன்மதுரக் குரலில்...


சுசீலா பிரபலமாக இருந்த சமயங்களில் சொல்லி வைத்தாற்போல் சில பாடல்கள் பதிவாகி பிரபலமாயின. இங்கு கதானாயகி தன் தோழியருடன் அல்லது தனியாக தன் ஆர்வ உணர்வுகளை வெளிப்படுத்துமுகமாக வந்த பாடல்கள் பல பிரபலம். தாயைக்காத்த தனயன் படத்தில் கே.வி. எம்.இசையில,  ‘காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை... தொடக்கம் நிறைய வெளியாயின. பணத்தோட்டத்தில் ,அழகான வாழை மரத்தோட்டம்.., ‘ மானாட்டம் தங்க மயிலாட்டம்...என்று ஆலய மணியில், ‘பறவைகளே, பறவைகளே எங்கே வந்தீங்க....தர்மம் தலை காக்கும் படத்திலும், ’ காடு கொடுத்த கனியிருக்கு,கழனி கொடுத்த நெல்லிருக்கு...என நீதிக்குப் பின் பாசத்தில் பாடி வந்தவர்...சர்வர் சுந்தரத்தில் ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு..’ இருவல்லவர்கள் படத்தில் ,’காவிரிக்கரையின் தோட்டத்திலே காணம் வந்தது தோழியரே...என்று பாடி அசத்தினார். இருளும் ஒளியும் படத்தில் வானிலே, மண்ணிலே ..எல்லாம் நீதானம்மா...என்று இயற்கையை ரசித்து பாடும் அழகு தனிதான். சாந்தி நிலயத்தில் , ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் ....’  என்று சொல்லி,பாடி மனதில் கல்வெட்டாக விழும் வகையில் தன் முத்திரையை பதித்தவர்.

http://www.youtube.com/watch?v=7DGjeBs9F8s
இதில் கதை சொல்லி வரும் பாங்கே தனி..              கோதைதனபாலன்





Thursday, February 2, 2012

Open Window: NAAN MANIK KADIKAI

Open Window: NAAN MANIK KADIKAI: Get afraid, to what have to got afraid. Render helps to others and not for incomplete. Do favour the justice that comes from true heart. ...

அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை

அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை: அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை : பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழில் வடமொழி தாக்கம் அதிகம் பயின்ற நடையில் ஒரு தளர் நடை போட்...

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை: பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழில் வடமொழி தாக்கம் அதிகம் பயின்ற நடையில் ஒரு தளர் நடை போட்டுக் கொண்டே தமிழ் வளர்ந்து வந்ததென்றால் அதற்கு பழையதும் ,புதியதுமான சைவத் திருமறைகளே காரணம் எனலாம். உ.வே.சாமிநாதர் அளித்த நற்பயன் என்றும் சொல்லலாம...்.மெல்ல இருபதுகளில் கால் பதிக்கும்போது, திரு.வி.க.,பாரதியார் போன்றோர் விடுதலை,பாராளுமன்றம்,மாநிலம் என்று தமிழ் சொற்களை அழகுற வெளிக் கொணர்ந்தனர்.அது சமயம் வெள்ளைத் துரைகளால் திரைப்படம் இயக்கப்பட்ட சூழ் நிலையில் வடமொழி தாக்கத்தில் இருந்து முதல் முறையாக தனித் தமிழில் பராசக்தி வெளிவந்து அது பெற்ற வரவேற்பு சொல்லி மாளாது. அடுத்து என்ன ? பழைய இலக்கிய பாடல்களும்,புது தமிழ் பாடல்களும் திரைவானில் இன்றளவும் வலம் வருகின்றன. இந்த வரிசையில், அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என்று வரும் குற்றால குறவஞ்சி பாடல், அரங்கேறின. சைவத்திருமறையாய்,....’பொறுமையுடன் நினது திருமலரடி ...’ கொஞ்சும் சலங்கையில், ’மாசில் வீணையும் மாலை மதியமும்..’ பாதை தெரியுது பார் திரையில் மெதுவாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தன. கீதை கண்ணனை கண்ணதாசன் ஒருவரே பலவிதமாக பரிமளிக்கச் செய்தார். பூம்புகாரில்..’மாசறு பொண்ணே,வலம்புரி முத்தே..’ என்று கலைஞர் சிலப்பதிகாரத்தை அப்படியே உள் நுழைத்தார்.பழைய வேற்று மொழி டப்பிங் படத்தில் அந்தந்த பாடல் அப்படியே கொள்ளப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வரிசையாக வேதா இசையில் கண்ணதாசன் ..’பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு..’ என்றும்,’ ‘கட்டோடு குழலாட ஆட..’ என்று பெரிய இடத்துப் பெண்ணில் , சங்கஇலக்கிய பாடல் கையாண்டிருப்பார். பட்டினத்தார் பாடலையும் ..’சட்டி சுட்டதடா கை விட்டதடா ’என்று விட்டு வைக்கவில்லை.எம்.ஜி.ஆர். தன் பங்கிற்கு கலங்கரை விளக்கத்தில் ...’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...’ என்று பறைசாற்றி வைத்தார்.....இனியும் புது கவிஞர்கள் தரமிரங்காது தமிழை வளர்த்து வருதல் வேண்டும்,னம் ரசனையும் அது போன்றிருத்தல் வேண்டும். என்னக் கவர்ந்த ஒரு வைரமுத்துவின் பாடல்... http://www.youtube.com/watch?v=akc4Id6KDcY

Tuesday, January 31, 2012

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

 Nagesh at his old age.  
இன்று, நம் தமிழ் திரை படத்துறையில் நகைச்சுவையில் செங்கோலோச்சிய நாகேஷ் நினைவு தினம்.அவர்தம் இனிய நினைவுகளின் வெளிப்பாடு எழுதச் சுகமானது. ஸ்ரீதர் அவர்களால் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர். தனது நடிப்பை முழுக்க சார்ளிசாப்ளின், லாஇரல் ஹார்டியை தழுவி தமிழுக்கேற்ற புதிய பரிமாணத்தில் மெருகேற்றி கொடுத்தவர். காதலிக்க நேரமில்லை படத்தில்.. மலரென்ற முகமொன்று.. பாட்டில் இவர் நடனம் ரசிக்கத்தக்கது... செல்லப்பா என்று அறிமுகம் செய்து கொண்டு. பாலையாவிடம் கதை சொல்லும் நேர்த்தி மறக்க முடியுமா..? திருவிளையாடல் தருமி இன்றும் இந்த கம்ப்யூட்டர்...உலகில் பல பரிமானங்க்ளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுபவி ராஜா அனுபவியில் ,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று சாடும் அழகே தனி. பாலசந்தரின் சர்வர் சுந்தரத்தில் ஒரு கதா நாயக அந்தஸ்தையும் திறம்பட செய்தவர். இவர் அழுதால் யாருக்கும் பிடிக்காது.. நீர்குமிழி படம் சான்று.
எம்.ஜி.ஆர்.க்கும் இவருக்கும் ஒத்து வராத நிலையிலும் தன் நிலையில் வென்று நின்றவர். எதிர் நீச்சல் போட்டவராயிற்றே..! நவக்கிரகம்,பாமா விஜயம் இன்னும் எல்லாம் இவருக்கு அனுக்கிரகமே. சமீபகால காலப் படங்களில் தந்தை வேடமேற்று நடித்தார். நடிப்பில்அழுவதைப் போல் வில்லத்தனத்தையும் இவரிடம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.. நகைச்சுவை நடிகனாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. இவர் நினைவுக்கு நகைச்சுவை நடிகை மனோரமாவுடன்..
http://www.youtube.com/watch?v=PdyX7rr9-68


கோதைதனபாலன்

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

இன்று, நம் தமிழ் திரை படத்துறையில் நகைச்சுவையில் செங்கோலோச்சிய நாகேஷ் நினைவு தினம்.அவர்தம் இனிய நினைவுகளின் வெளிப்பாடு எழுதச் சுகமானது. ஸ்ரீதர் அவர்களால் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர். தனது நடிப்பை முழுக்க சார்ளிசாப்ளின், லாரல் ஹார்டியை தழுவி தமிழுக்கேற்ற புதிய பரிமாணத்தில் மெருகேற்றி கொடுத்தவர். காதலிக்க நேரமில்லை படத்தில்.. மலரென்ற முகமொன்று.. பாட்டில் இவர் நடனம் ரசிக்கத்தக்கது... செல்லப்பா என்று அறிமுகம் செய்து கொண்டு. பாலையாவிடம் கதை சொல்லும் நேர்த்தி மறக்க முடியுமா..? திருவிளையாடல் தருமி இன்றும் இந்த கம்ப்யூட்டர்...உலகில் பல பரிமானங்க்ளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுபவி ராஜா அனுபவியில் ,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று சாடும் அழகே தனி. பாலசந்தரின் சர்வர் சுந்தரத்தில் ஒரு கதா நாயக அந்தஸ்தையும் திறம்பட செய்தவர். இவர் அழுதால் யாருக்கும் பிடிக்காது.. நீர்குமிழி படம் சான்று.
எம்.ஜி.ஆர்.க்கும் இவருக்கும் ஒத்து வராத நிலையிலும் தன் நிலையில் வென்று நின்றவர். எதிர் நீச்சல் போட்டவராயிற்றே..! நவக்கிரகம்,பாமா விஜயம் இன்னும் எல்லாம் இவருக்கு அனுக்கிரகமே. சமீபகால காலப் படங்களில் தந்தை வேடமேற்று நடித்தார். நடிப்பில்அழுவதைப் போல் வில்லத்தனத்தையும் இவரிடம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.. நகைச்சுவை நடிகனாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. இவர் நினைவுக்கு நகைச்சுவை நடிகை மனோரமாவுடன்..
http://www.youtube.com/watch?v=PdyX7rr9-68












கோதைதனபாலன்

Saturday, January 28, 2012

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை: அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என...

திரை இசையில் இலக்கிய பார்வை


அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என்று வரும் குற்றால குறவஞ்சி பாடல், அரங்கேறின. சைவத்திருமறையாய்,....’பொறுமையுடன் நினது திருமலரடி ...’ கொஞ்சும் சலங்கையில், ’மாசில் வீணையும் மாலை மதியமும்..’ பாதை தெரியுது பார் திரையில் மெதுவாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தன. கீதை கண்ணனை கண்ணதாசன் ஒருவரே பலவிதமாக பரிமளிக்கச் செய்தார். பூம்புகாரில்..’மாசறு பொண்ணே,வலம்புரி முத்தே..’ என்று கலைஞர் சிலப்பதிகாரத்தை அப்படியே உள் நுழைத்தார்.பழைய வேற்று மொழி டப்பிங் படத்தில் அந்தந்த பாடல் அப்படியே கொள்ளப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வரிசையாக வேதா இசையில் கண்ணதாசன் ..’பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு..’ என்றும்,’ ‘கட்டோடு குழலாட ஆட..’ என்று பெரிய இடத்துப் பெண்ணில் , சங்கஇலக்கிய பாடல் கையாண்டிருப்பார். பட்டினத்தார் பாடலையும் ..’சட்டி சுட்டதடா கை விட்டதடா ’என்று விட்டு வைக்கவில்லை.எம்.ஜி.ஆர். தன் பங்கிற்கு கலங்கரை விளக்கத்தில் ...’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...’ என்று பறைசாற்றி வைத்தார்.....இனியும் புது கவிஞர்கள் தரமிறங்காது தமிழை வளர்த்து வருதல் வேண்டும், நம் ரசனையும் அது போன்றிருத்தல் வேண்டும். என்னக் கவர்ந்த ஒரு வைரமுத்துவின் பாடல்... http://www.youtube.com/watch?v=akc4Id6KDcY

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்...     
கோதைதனபாலன்




 ·  · 

Wednesday, January 25, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்: கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார். வானம் பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்ட...

கண்ணணோடு கண்ணதாசன்

  கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார்.

பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன்

நடுவினிலே......' ..பாடலை பாரதியார் எழுதியது என்று மாற்றி

நினைத்தவரும் உண்டு. 'காவிரிகரையின் ஓ
ரத்திலே கானம்


வந்தது,கானம் வந்த வழியினிலே கண்ணன் வந்தான் தோழியரே..''

என்று ஜஸ்டிசு விசுவநாதனில்  சொல்லியிருப்பார்.

 

  'ராதைக்கேற்ற கண்ணனோ , சீதைக்கேற்ற ராமனோ ,

கோதைக்கேற்ற  கோவலன் யாரோ..' என்று 'சுமைதாங்கியில் 

 கூறி வைப்பார் . பின் பச்சை விளக்கில்  மணப்பெண்ணின் நாணத்தை

விளக்குகையில் ...'ஒன்று சொல்ல நினைத்தால் அந்த பொல்லாத

கண்ணனின் ராதை, நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்

கொண்டாள் அந்த புல்லாங் குழல் மொழிக் கோதை .. ' என்று

இருவரையுமே கண்ணனோடு இணைத்து பாடியவர்..'மல்லிகை

முல்லை... என்று துவங்கும் சிவாஜி பாடலில் ...' கோதை ஆண்டாள்

தமிழை ஆண்டாள் என்று கண்ணனின் தெய்வத் தன்மையோடு பாடி

விடுவார். நானும் ஒரு பெண் திரையில்..'கண்ணா கருமை நிறக்

கண்ணா ..என்றழைத்து கருமை நிறக் குறையினால் படும் பாட்டிற்கு

விளக்கம் கேட்பார். 'கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.... குழல்

எடுப்பான் பாட்டிசைப்பான் ,வலம்புரி சங்கெடுத்து

பாலுட்டுவான் ...'பாட்டில் வரும் அழகுற கற்பனையை என்ன

சொல்ல ,! பஞ்சவர்ணகிளியில் ! மனதில் இந்த சந்தோஷங்கள்

அனுபவித்து கீதை கண்ணனையும் பாடுவார். ..தர்மம் என்னும்

தேரிலேறி கண்ணன் வந்தான் , தாளாத துயர் தீர்க்க கண்ணன்

வந்தான் ..என்று ராமுவில் சொல்லி , கர்ணனில் .'... மன்னித்து

அருள்வாயடா.. என்று இறங்கி 'வஞ்சகன் கண்ணனடா நானும் உன்

பழி கொண்டேனடா ...' என்ற இயலாமையை தன மனம் வருந்தவும்,

யாரும் போற்றும்படியாகவும் இவரால்தான் அத்தகைய வரிகளை

புனைய முடிந்தது. தெய்வமகனில் ,'கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா.. என்று உருகிவிட்டு ,' கௌ ரவம் படத்தில் 'நீயும் நானுமா

கண்ணா என்று ஆரம் பித்து .. நாளைய பாரதம் யாரதன்

காரணம் ..என்று அதட்டி கேட்கும் பாங்கு இவரிடத்தில் மட்டுமே.ஆக

’கண்ணனை நினைக்காத நாளிலையே ‘ ..என்பவரும் இவரே...



http://www.youtube.com/watch?v=svefvX9hPm8



கோதைதனபாலன்


 கண்ணன் வருவான்.. வாலி எழுதியது.

Saturday, January 21, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணதாசனின் கவிதை நடை

அனுபவ முத்திரைகள்: கண்ணதாசனின் கவிதை நடை: கண்ணதாசன் பாடல்களில் குறிப்பிடத்தக்க தனித்துவங்கள் நிறைந்தே காணப்படும். அதில் சொல் சுவை , பொருள் சுவையுடன் தனி நடை அழகு நயமுடன் பின்னப்பட்டி...

கண்ணதாசனின் கவிதை நடை

கண்ணதாசன் பாடல்களில் குறிப்பிடத்தக்க தனித்துவங்கள் நிறைந்தே காணப்படும். அதில் சொல் சுவை , பொருள் சுவையுடன் தனி நடை அழகு நயமுடன் பின்னப்பட்டிருக்கும். ரசிக்கப்படும் ரசனை கேள்வியும் பதிலுமான பாடல்களிலும் சற்று அதிகமாகவே காணப்படும். இருவர் உள்ளம் படத்தில் 'நதி எங்கே போகிறது ..கடலைத்தேடி.
நாள் எங்கே போகிறது ..பொழுதை த்தேடி.
நிலவெங்கே போகிறது .. மலரைதேடி
நினைவெங்கே போகிறது .. உறவை தேடி .. என்று முடிப்பார்... அடுத்து . சொல்லியாயிற்று , அடுத்துஎன்ன என்பது போல் ,
அழகு சிரிக்கிறது ...ஆசை துடிக்கிறது
பழக நினைக்கிறது ....பக்கம் வருகின்றது ... என்று சொல்லி வருவார். இதுவா அதுவா என்ற கேள்விக்கு அந்த கேள்வி ஒத்த வரிகளையே பதிலாகவும் காண்பிக்கும் ஜாலம் அவரிடம் உண்டு.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா....[கேள்வி]
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததும் நிலவு வந்ததா ..[பதில்] .. பார்த்தால் பசிதீரும் .........இப்படியே பாடல் போவது ஒரு சுவைதானே. பிறகு இன்னும், சொல்லும் உண்மையை எதிர்மறை பொருள் கொண்டே உணர்த்துவது போல் பாடல் வடிப்பது கைவந்த கலை.
பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா ...... ஆனந்த ஜோதியில். மற்றும் முரண்பாடான பொருளையும் தெளிவாக வைப்பார்.
நினைக்க தெரிந்தா மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா ... ஆனந்த ஜோதியில். இரட்டை அர்த்தம் சிலேடை நயம் அவர் பாடலில் காணலாம். 'அத்திக்காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே ,இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ.' .....பலேபாண்டியாவில் இது அவரின் இலக்கிய ரசனைக்கும் பொருந்தும். தத்துவம் தலை தூக்கி நிற்கும் அவரிடம்.

...வாழ்க்கை என்பது வியாபாரம்
ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.. பாலும்பழத்தில். அவள் ஒரு தொடர்கதையில், 'கள்ளிக்கேது முள்ளில் வேலி ..போடி தங்கச்சி , காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ... தன் நிலைப்பாட்டை அழகுபட உரைப்பார். அபூர்வராகங்களில் .....'அதிசய ராகம் ஆனந்த ராகம் ..', ' கேள்வியின் நாயகனே ...'எழுத, பாலசந்தர் அந்த கதைக்கு இவர் ஒருத்தராலே இப்படி ஒரு அருமையான பாடல் வடிக்க முடிந்தது என்று புளகாங்கிதம் அடைந்தது யாவரும் அறிந்ததே.
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DH5nFSVMxK20&h=XAQFmLJ42
 



கோதைதனபாலன்