சுசீலா பிரபலமாக இருந்த சமயங்களில் சொல்லி வைத்தாற்போல் சில பாடல்கள் பதிவாகி பிரபலமாயின. இங்கு கதானாயகி தன் தோழியருடன் அல்லது தனியாக தன் ஆர்வ உணர்வுகளை வெளிப்படுத்துமுகமாக வந்த பாடல்கள் பல பிரபலம். தாயைக்காத்த தனயன் படத்தில் கே.வி. எம்.இசையில, ‘காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை... தொடக்கம் நிறைய வெளியாயின. பணத்தோட்டத்தில் ,அழகான வாழை மரத்தோட்டம்.., ‘ மானாட்டம் தங்க மயிலாட்டம்...என்று ஆலய மணியில், ‘பறவைகளே, பறவைகளே எங்கே வந்தீங்க....தர்மம் தலை காக்கும் படத்திலும், ’ காடு கொடுத்த கனியிருக்கு,கழனி கொடுத்த நெல்லிருக்கு...என நீதிக்குப் பின் பாசத்தில் பாடி வந்தவர்...சர்வர் சுந்தரத்தில் ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு..’ இருவல்லவர்கள் படத்தில் ,’காவிரிக்கரையின் தோட்டத்திலே காணம் வந்தது தோழியரே...என்று பாடி அசத்தினார். இருளும் ஒளியும் படத்தில் வானிலே, மண்ணிலே ..எல்லாம் நீதானம்மா...என்று இயற்கையை ரசித்து பாடும் அழகு தனிதான். சாந்தி நிலயத்தில் , ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் ....’ என்று சொல்லி,பாடி மனதில் கல்வெட்டாக விழும் வகையில் தன் முத்திரையை பதித்தவர்.
http://www.youtube.com/watch?v=7DGjeBs9F8s
இதில் கதை சொல்லி வரும் பாங்கே தனி.. கோதைதனபாலன்
இதில் கதை சொல்லி வரும் பாங்கே தனி.. கோதைதனபாலன்

No comments:
Post a Comment