அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என்று வரும் குற்றால குறவஞ்சி பாடல், அரங்கேறின. சைவத்திருமறையாய்,....’பொறுமையுடன் நினது திருமலரடி ...’ கொஞ்சும் சலங்கையில், ’மாசில் வீணையும் மாலை மதியமும்..’ பாதை தெரியுது பார் திரையில் மெதுவாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தன. கீதை கண்ணனை கண்ணதாசன் ஒருவரே பலவிதமாக பரிமளிக்கச் செய்தார். பூம்புகாரில்..’மாசறு பொண்ணே,வலம்புரி முத்தே..’ என்று கலைஞர் சிலப்பதிகாரத்தை அப்படியே உள் நுழைத்தார்.பழைய வேற்று மொழி டப்பிங் படத்தில் அந்தந்த பாடல் அப்படியே கொள்ளப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வரிசையாக வேதா இசையில் கண்ணதாசன் ..’பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு..’ என்றும்,’ ‘கட்டோடு குழலாட ஆட..’ என்று பெரிய இடத்துப் பெண்ணில் , சங்கஇலக்கிய பாடல் கையாண்டிருப்பார். பட்டினத்தார் பாடலையும் ..’சட்டி சுட்டதடா கை விட்டதடா ’என்று விட்டு வைக்கவில்லை.எம்.ஜி.ஆர். தன் பங்கிற்கு கலங்கரை விளக்கத்தில் ...’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...’ என்று பறைசாற்றி வைத்தார்.....இனியும் புது கவிஞர்கள் தரமிறங்காது தமிழை வளர்த்து வருதல் வேண்டும், நம் ரசனையும் அது போன்றிருத்தல் வேண்டும். என்னக் கவர்ந்த ஒரு வைரமுத்துவின் பாடல்... http://www.youtube.com/watch?v=akc4Id6KDcY
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்...
கோதைதனபாலன்
No comments:
Post a Comment