தமிழ்த்திரை உலகில் குரல் இனிமைக்கும் , தெய்வீகத்திற்குமாய் ஒருவருக்கொருவர் போட்டி இருக்கும் கட்டத்தில் தனக்கென்று தனித்துவமான கவர்ச்சியின் அச்சாரதுக்கான குரல் வளத்தோடு ஒரு தனி இடத்தை தனக்கென்று தக்க வைத்துக் கொண்டவர் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால் மிகை இல்லை. பெரும்பாலும் சுசீலாவோடு துணைக் கதாநாயகிக்காகவே இவரது பாடல்கள் கணிசமான வெற்றி அடைந்தது. பாத காணிக்கையில் , 'பூஜைக்கு வந்த மலரே வா...'. பச்சை விளக்கில், ' தூது சொல்ல ஒரு தோழி இல்லை என ....', இருமலர்கள் ,'கடவுள் தந்த இருமலர்கள், எங்க வீட்டுப் பிள்ளையில் ,'மலருக்குத் தென்றல் பகையானால் ....' இப்படியே போனால் அட்டவணை நீண்டுவிடும். தனியாகவும் இவரை பாடல் வைத்து எம்.எஸ்.வி. வெற்றி கண்டார். இனிமைக்கு ,'இரத்தத் திலகத்தில், 'வாடைக் காற்றம்மா...',கறுப்புப் பணத்தில் , 'அம்மம்மா கேளடி தோழி....', பின்னர் கோஷ்டி கானமாக , நன் ஆணையிட்டால், 'பிறந்த இடம் தேடி ...', கண்களும் காவடி சிந்தாகட்டும்....எங்க வீட்டுப் பிள்ளை யில் அழகாக அமைந்தது. பணமா பாசமா வில்.....'எலந்தப் பயம்...பாட்டு அமர்க்களமானது, நாட்டுப் புறச் சாயலில் கவர்ச்சியான இசையும் சேர்ந்து அந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்ற இசைத் தட்டு என்ற பெருமையும் தட்டிக் கொண்டது. வேதா தன் பங்கிற்கு , மேற்கத்திய இசைக்கு இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். வல்லவன் ஒருவனில்....'அம்ம்மம்மா கன்னத்தில்....', வல்லவனுக்கு வல்லவனில் சீர்கழியோடு கண்டாலும் கண்டேனே ....' இது போன்று பல. இந்த வெற்றிகளைப் பார்த்து , வெகுளிப் பெண்ணில் , ஆனால் சற்று மென்மையான, 'காதோடுதான் நான் பாடுவேன்..' அடைந்தது வெற்றி. சிவந்த மண்ணில், 'பட்டத்து ராணி.. இவருக்கென்றே அமைந்த வெற்றிப்பாடல். ' நான்' திரையில், கம் செப்டெம்பர் ட்யூன் ,வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே......மறக்க முடியாததாயிற்று.தரிசனம்,'இது மாலை நேரத்து மயக்கம்....பாடலில் சரியான பாவங்களை வெளிப்படுத்தியிருப்பார். தெய்வப் பாடல்....மாரியம்மன் பாடல்கள் இவர் பாடியவை இடம் பெறாத ஒலிபெருக்கிகளே கிராமத்தில் இன்னும் இல்லை எனலாம். வெண்ணிற ஆடையில் இவர் பாடிய நீ என்பதென்ன ,நான் என்பதென்ன ...சற்று சிரமப்பட்டே பாடப் பட பாடல் என்று சொல்வர். ' வந்தால் என்ன...ஒஒய் எனக்கும் வந்த இந்த மயக்கம்.....' உண்மை ,இவர் பாடல்களில் ஒருவித காந்த ஈர்ப்பு இருப்பது உண்மை.

No comments:
Post a Comment