Search This Blog
Friday, November 25, 2011
ஆலயமணி
ஆலயமணி திரைப்படம் கதை வலு கொண்ட படம்.இரு கோணங்களில் கதை
நகரும். சிறு வயதில் தனது அகம்பாவத்தினால் ஏற்பட்ட பெரிய இழப்பு அவ்வப்போழது தாக்கி வரும் வேதனை ஒரு பக்கம். தன நேசிக்கும் ஒருத்தி தனக்கு கிடைத்தது தனது நண்பன் விட்டுக்கொடுத்ததால் என்றறியும் துடிப்பு இன்னொரு பக்கம்...சிவாஜி அருமையான நடிப்பு.சரோஜாதேவி அமரிக்கையாக வருவார்.எஸ்.எஸ்.ஆர் காதலில் துடுக்குத்தனம் சிவாஜியின் மனைவியாக அமைதியான தோற்றம் இரண்டு வேறுபட்ட தோற்றத்தில்
வெளுத்து வாங்கியிருப்பார். எஸ்.எஸ்.ஆர் ஒரு உண்மை நண்பனாய் விட்டுக்கொடுத்து ஒருதலை காதலில் வரும் விஜயகுமாரியை பண்புடன் ஏற்கும் பாங்கான நடிப்பு,இப்படம் வெற்றி அடைந்தது. பி .எஸ்.வீரப்பா தயாரித்த படம்.
கண்ணதாசன் பாடல் ..... பாத்திரத்தின் தன்மை அறிந்து எழுதிய 'சட்டி சுட்டதடா ,கை விட்டதடா'... வெகுவாக அந்நாளில் சிலாகித்து பேசப்பட்டது.விசுவநாதன் இசையில் அனைத்துமே இனிமை.
முக்கிய பாடல் : பொன்னை விரும்பும் பூமியிலே ....
மானாட்டம் தங்க மயிலாட்டம் ...
கல்லெல்லாம் மணிக்க கல்லாகுமா..[இதில் ஈஸ்வரி முதல் முறையாக ஹம்மிங் செய்தது.]
சட்டி சுட்டதடா கை விட்டதடா .. [இந்த வரி பட்டினத்தார் பாடலில் எடுத்தாண்டது என்பது கண்ணதாசன் கூற்று.]
கோதைதனபாலன் .
Saturday, October 15, 2011
அனுபவ முத்திரைகள்: பார் மகளே பார்
அனுபவ முத்திரைகள்: பார் மகளே பார்: ஒரு சிறிய ,அறியாத வயதில் நம்மில் எப்படி பட்ட குணங்கள் வெளிப்படுகின்றன என்ற ஒரு உண்மையை எனக்கு உணர்த்திய படம். இரு குடும்ப நண்பர்கள் பற்றி ...
பார் மகளே பார்
ஒரு சிறிய ,அறியாத வயதில் நம்மில் எப்படி பட்ட குணங்கள் வெளிப்படுகின்றன என்ற ஒரு உண்மையை எனக்கு உணர்த்திய படம். இரு குடும்ப நண்பர்கள் பற்றி தொடங்கி ...அந்த ஒருவனுக்கு உண்மையை வாழ்க்கை முறையில் உணர்த்தும் படம். இதில் சிவாஜி ஒரு அகங்கார திமிர் பிடித்த தனவந்தராய் அறிமுகமாவார். தன்பிள்ளை , கொடுத்த அதிரசத்தை ருசித்து அருமை என்றவர் அது ஒரு ஏழை தொழிலாளி வீட்டில் செய்தது என்று அறிந்ததும் தன வாயை கழுவுவார்....மனம் நொந்தது.இப்படியும் உண்டோ என்று. சக நண்பன் பொருள் யாவும் தொலைத்து நிற்கையில் அவமதிப்பர்......இப்படியும் வாழும் வகை உண்டோ என்று என் சிறிய மனது அதிர்ந்து போனது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. பின்னர் கதை அவர் பாசத்துடன் வளர்த்த பிள்ளையே வேறு ஒருவர் பெற்ற பிள்ளை என்று அறியும் போது .....மனம் துடித்து .,மாறுகின்ற நிலை உணர்த்துவதாய் இருக்கும்
மற்றையவை; என்னை தொட்டு சென்றன கண்கள் .........
பார் மகளே பார் ,நீ இல்லாத மாளிகையை...
அவள் பறந்துபோனாளே ........
மதுரா நகரில் தமிழ்சங்கம் .....
Tuesday, October 4, 2011
அனுபவ முத்திரைகள்: தேனிலவு
அனுபவ முத்திரைகள்: தேனிலவு: முதல் முதலாக மன மகிழ்வுடனே இறுதிவரை பார்த்த,மறுமுறையும் பார்க்க வைத்த படம்.கதை சாதரணமானதுதான்.சின்ன,சின்ன குழப்பங்கள் ,கதையை சோகமயமாக்காமல...
தேனிலவு
முதல் முதலாக மன மகிழ்வுடனே இறுதிவரை பார்த்த,மறுமுறையும் பார்க்க வைத்த படம்.கதை சாதரணமானதுதான்.சின்ன,சின்ன குழப்பங்கள் ,கதையை சோகமயமாக்காமல் ,நகைச்சுவை உணர்வுடன் நகர்த்தி சென்றதில் இயக்குனர் ஸ்ரீதருக்கு வெற்றியே.நான் அறிய தமிழ் படங்களில் இவ்வளவு அழகாக வேறு எந்த படமும் காஷ்மீரை காண்பித்தது இல்லை.தங்கவேலு,சரோஜா காமெடி இன்றும் நம்மை சிரிக்க வைப்பது ஆகும்.குறிப்பாக தட்டு கொண்டு படகு ஓட்டுவது மறக்க முடியாத ஒன்று.பாடல்கள் அருமை .ராஜாவின் இசை இறக்குமதியானாலும் கண்ணதாசன் வரிகளுடன் மனதை கவர்பவை. வைஜயந்தி பாடுவதாக அமைந்த ..'மலரே மலரே தெரியாதோ..' ,ஜெயந்தி பாடுவதான 'ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..' இன்றும் எல்லோர் நினைவிலும் அசை போடுவன.
ஹிட்டான பாடல்கள்: ஓஹோ எந்தன் பேபி,
பாட்டு பாடவா ,பார்த்து பேசவா.
காலையும் நீயே,மாலையும் நீயே..... பாடலில் ஹம்மிங் ஜானகி குரலில் அழகாக இருக்கும்.
Thursday, September 29, 2011
அனுபவ முத்திரைகள்: கல்யாண பரிசு
அனுபவ முத்திரைகள்: கல்யாண பரிசு: . புரியாத வயதில் மனதில் புரிந்தும் புரியாமல் ஒட்டிக் கொண்ட படம்.கதை இன்னது என்று அறியாமலே இறுதிக்கா ட்சி மனதை வெகுவாக குடைந்து விட்டது. ...
கல்யாண பரிசு
.
புரியாத வயதில் மனதில் புரிந்தும் புரியாமல் ஒட்டிக் கொண்ட படம்.கதை இன்னது என்று அறியாமலே இறுதிக்கா ட்சி மனதை வெகுவாக குடைந்து விட்டது. சிறு பிள்ளையின் கையில் ஒரு துண்டு கடிதம் ஒன்று மணப்பெண் சரோஜா தேவி இடம் கொடுத்தனுப்ப படுகிறது.திருமண முடிந்த கையோடு கடிதம் பார்த்து பிள்ளையுடன் வேகமாய் மண்டப வாசல் வெளிவர ....தூரத்தில் ஜெமினி சென்றுகொண்டிருக்கிறார் . அழைக்க எத்தனிக்கும் போது நாகேஸ்வரராவ் கையை பிடித்து தடுத்து விடுகிறார்.பின்னாளில் தான் இது ஒரு அருமையான விட்டுக்கொடுக்கும் முக்கோணக் காதல் கதை என்று புரிந்தது.இதன் கன பரிமாணம் அதிகமே.தமக்கைக்கு அவள் அறியாமலே காதலை விட்டுக்கொடுத்து,விலகி வேறு ஒருவனை மணந்த நிலையில் தமக்கை இறந்த நிலையில் அவளது பிள்ளையை இவளிடம் சேர்ப்பித்து காதலன் பிரிந்து போகும் இடமே அந்த இறுதி காட்சி. அந்தச் சிறு பிள்ளையே அவளின் கல்யாண பரிசு. இப்படி ஒரு முடிவு தீர்கத்தை தமிழ் படங்கள்தான் அன்றும் அளித்தது,இன்றும் அளிக்கிறது. இடை இடையே தங்கவேலு ,எம்.சரோஜாவின்,மன்னார் கம்பெனி,எழுத்தாளர் பைரவர் நகைச்சுவை காட்சிகள் வெகு பிரசித்தி பெற்றவை.ஆப்பிள் ஜூஸ் ..என்னும் நக்கல் இன்றும் சுவைக்கத் தகுந்தது.. பாடல்கள் இன்றும் கேட்க ,பொருளுடன் இனிமை மிகுந்தது.
நினைவில் நிற்பது: காதலிலே தோல்வியுற்றால் ....
சிறப்பு பாடல்கள்; உன்னைகண்டு நான் ஆட...
துள்ளாத மனமும் துள்ளும்..
வாடிக்கை மறந்ததும் ஏனோ...
Wednesday, September 28, 2011
வெள்ளித்திரை தரும் பாடங்கள்
அனுபவ முத்திரையின் இந்த பக்கத்தில் என் மனதில் தாக்கங்களை ஏற்படுத்திய திரைப்பட வரிசைகளையும், பாடல்களையும் அவற்றில் நான் எடுத்துக் கொண்ட பாடங்களை பற்றி எழுதி வைக்க விரும்பி தொடர்கிறேன்.
திரைப்படம் என்பது எல்லோரையும் பொறுத்த அளவில் முதலில் ஒரு பொழுது போக்கு அம்சமாகவே அறிமுகமாகிறது. கூத்தும் ,நாடகங்களையும் பார்த்த கண்களுக்கு முதலில் பிடிக்கும் அம்சமாவது பாடலும் எடுத்துக்கொண்ட கதை அமைப்பும்தான்.நடிப்பு கூட பிறகுதான், கா ட்சி அமைப்பு ,அரங்க நிர்மாணம் என்பதெல்லாமும் அவ்வழியே. வேடிக்கையான உண்மை யாதென்றால் ரசிகர் மனதில் நீண்டநாள் வியாபித்திருக்கக் கூடிய ரசனை பாடல்,கதை சம்பந்தமானதே. காரணம் , மற்றவை எல்லாம் அடுத்தடுத்து வரும் காலங்களில் மாற்றங்கள் நிறைய கொண்டு வருவதும் போவதுமான நிலையற்ற தன்மையைக் கொண்டது. பாடல் என்பது அப்படி அல்ல.ராக பாவங்களுடன் சொல்லும் ,பொருளும் கொண்டிருக்குமாயின் காலம் வென்று தலைமுறைக்கும் எதிரொலித்துக் கொண்டிருப்பது இன்றும் கண்கூடு. கதை நேர்த்தியாக சொல்வதோடு முடிவுரை ஆணி அடித்தாற்போல் ,பிறிதொரு முடிவு சொல்லி வருவதற்கான இடம் இல்லாது போகும்பொழுது பார்த்தவர் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமாகிவிடும்.
பாசமலர்
இளம் பிராயத்தில் ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கிய படம். சிறுவயதில் அண்ணனும் தங்கையும் எப்படியெல்லாம் சிரமப்பட்டு தாய் தகப்பன் இல்லாது
வாழ்ந்து மேன்மையுருகிறார்கள் என்று முற்பகுதி சொல்லும் . இருவரும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட புதிய உறவுகளின் கெடுபிடியால் தடுமாறி பிரிகிறார்கள். அப்படிப்பட்ட உறவுகளின் மத்தியிலும் அவர்களிடை மலர்ந்திருந்த பாச மலர் வாசம் இழந்து விடவில்லை. அவர்தம் மறைவில் கம்பீரமாகவே அனைவர் மனதிலும் வாசம் புரிய ஆரம்பித்து விடுகிறது என்று சொன்னால் மிகை இல்லை.
நடித்தவர்கள்: சிவாஜி ,சாவித்திரி
மறந்துவிடாத பாடல் : 1 . மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்......
2. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல......
சிறப்பான பாடல்கள் : வாராயோ தோழி
வாராயோ....
இது இன்றும் கிராமப்புறதிருமண வைபவங்களில் ஒலிக்கும் பாடல்.
பாட்டன்று கேட்டேன்பரவசமானேன்....
மயங்குகிறாள் ஒரு மாது...
இரண்டு பாடல்களும் நடை அழகு மிளிர்ந்தவை.
பாட்டன்று கேட்டேன்பரவசமானேன்....
மயங்குகிறாள் ஒரு மாது...
இரண்டு பாடல்களும் நடை அழகு மிளிர்ந்தவை.
Subscribe to:
Posts (Atom)
