Search This Blog

Thursday, September 29, 2011

அனுபவ முத்திரைகள்: கல்யாண பரிசு

அனுபவ முத்திரைகள்: கல்யாண பரிசு: . புரியாத வயதில் மனதில் புரிந்தும் புரியாமல் ஒட்டிக் கொண்ட படம்.கதை இன்னது என்று அறியாமலே இறுதிக்கா ட்சி மனதை வெகுவாக குடைந்து விட்டது. ...

கல்யாண பரிசு


.

புரியாத வயதில் மனதில் புரிந்தும் புரியாமல் ஒட்டிக் கொண்ட படம்.கதை இன்னது   என்று அறியாமலே இறுதிக்கா ட்சி மனதை வெகுவாக குடைந்து விட்டது. சிறு பிள்ளையின் கையில் ஒரு துண்டு கடிதம் ஒன்று மணப்பெண் சரோஜா தேவி இடம் கொடுத்தனுப்ப படுகிறது.திருமண முடிந்த கையோடு   கடிதம் பார்த்து பிள்ளையுடன் வேகமாய் மண்டப வாசல் வெளிவர ....தூரத்தில் ஜெமினி சென்றுகொண்டிருக்கிறார் . அழைக்க எத்தனிக்கும் போது நாகேஸ்வரராவ் கையை பிடித்து தடுத்து விடுகிறார்.பின்னாளில் தான் இது ஒரு அருமையான விட்டுக்கொடுக்கும் முக்கோணக் காதல் கதை என்று புரிந்தது.இதன் கன பரிமாணம் அதிகமே.தமக்கைக்கு அவள் அறியாமலே காதலை விட்டுக்கொடுத்து,விலகி வேறு ஒருவனை மணந்த நிலையில் தமக்கை இறந்த நிலையில் அவளது பிள்ளையை இவளிடம் சேர்ப்பித்து காதலன் பிரிந்து போகும் இடமே அந்த இறுதி காட்சி. அந்தச் சிறு பிள்ளையே அவளின் கல்யாண பரிசு. இப்படி ஒரு முடிவு தீர்கத்தை தமிழ் படங்கள்தான் அன்றும் அளித்தது,இன்றும் அளிக்கிறது. இடை இடையே தங்கவேலு ,எம்.சரோஜாவின்,மன்னார் கம்பெனி,எழுத்தாளர் பைரவர் நகைச்சுவை காட்சிகள் வெகு பிரசித்தி பெற்றவை.ஆப்பிள் ஜூஸ் ..என்னும் நக்கல் இன்றும் சுவைக்கத் தகுந்தது.. பாடல்கள் இன்றும் கேட்க ,பொருளுடன் இனிமை மிகுந்தது.

நினைவில் நிற்பது:  காதலிலே தோல்வியுற்றால் ....

சிறப்பு பாடல்கள்;    உன்னைகண்டு நான் ஆட...
                                       துள்ளாத மனமும் துள்ளும்..  
                                       வாடிக்கை மறந்ததும் ஏனோ...     







Wednesday, September 28, 2011

வெள்ளித்திரை தரும் பாடங்கள்

  அனுபவ முத்திரையின் இந்த பக்கத்தில் என் மனதில் தாக்கங்களை ஏற்படுத்திய திரைப்பட வரிசைகளையும், பாடல்களையும் அவற்றில் நான் எடுத்துக் கொண்ட பாடங்களை பற்றி  எழுதி வைக்க விரும்பி தொடர்கிறேன்.    


திரைப்படம் என்பது எல்லோரையும் பொறுத்த அளவில் முதலில் ஒரு பொழுது போக்கு அம்சமாகவே அறிமுகமாகிறது.  கூத்தும் ,நாடகங்களையும் பார்த்த கண்களுக்கு முதலில் பிடிக்கும் அம்சமாவது பாடலும் எடுத்துக்கொண்ட கதை அமைப்பும்தான்.நடிப்பு கூட பிறகுதான்,  கா ட்சி அமைப்பு ,அரங்க நிர்மாணம் என்பதெல்லாமும்  அவ்வழியே.  வேடிக்கையான உண்மை யாதென்றால் ரசிகர் மனதில் நீண்டநாள் வியாபித்திருக்கக் கூடிய ரசனை பாடல்,கதை சம்பந்தமானதே. காரணம் ,  மற்றவை எல்லாம் அடுத்தடுத்து வரும் காலங்களில் மாற்றங்கள் நிறைய கொண்டு வருவதும் போவதுமான நிலையற்ற தன்மையைக் கொண்டது. பாடல் என்பது அப்படி அல்ல.ராக பாவங்களுடன் சொல்லும் ,பொருளும் கொண்டிருக்குமாயின் காலம் வென்று தலைமுறைக்கும் எதிரொலித்துக் கொண்டிருப்பது இன்றும் கண்கூடு. கதை நேர்த்தியாக சொல்வதோடு முடிவுரை ஆணி அடித்தாற்போல் ,பிறிதொரு முடிவு சொல்லி வருவதற்கான இடம் இல்லாது போகும்பொழுது பார்த்தவர் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமாகிவிடும்.  


பாசமலர்

இளம் பிராயத்தில் ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கிய படம். சிறுவயதில் அண்ணனும் தங்கையும் எப்படியெல்லாம் சிரமப்பட்டு தாய் தகப்பன் இல்லாது 
வாழ்ந்து மேன்மையுருகிறார்கள் என்று முற்பகுதி சொல்லும் . இருவரும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட  புதிய உறவுகளின் கெடுபிடியால் தடுமாறி பிரிகிறார்கள்.  அப்படிப்பட்ட உறவுகளின் மத்தியிலும் அவர்களிடை மலர்ந்திருந்த பாச மலர் வாசம் இழந்து விடவில்லை. அவர்தம் மறைவில் கம்பீரமாகவே அனைவர் மனதிலும் வாசம் புரிய ஆரம்பித்து விடுகிறது என்று சொன்னால் மிகை இல்லை. 


நடித்தவர்கள்:  சிவாஜி ,சாவித்திரி      

மறந்துவிடாத பாடல் :      1 . மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்......
                                                    2.  மலர்ந்தும் மலராத பாதி மலர் போல......      
                                                                          


சிறப்பான பாடல்கள் :  வாராயோ தோழி 
                                                    வாராயோ....    
                                           இது இன்றும் கிராமப்புறதிருமண வைபவங்களில் ஒலிக்கும் பாடல்.    

                                                                                       
 பாட்டன்று கேட்டேன்பரவசமானேன்....

 மயங்குகிறாள் ஒரு   மாது...                                              
                                             
இரண்டு பாடல்களும் நடை அழகு மிளிர்ந்தவை.