அனுபவ முத்திரையின் இந்த பக்கத்தில் என் மனதில் தாக்கங்களை ஏற்படுத்திய திரைப்பட வரிசைகளையும், பாடல்களையும் அவற்றில் நான் எடுத்துக் கொண்ட பாடங்களை பற்றி எழுதி வைக்க விரும்பி தொடர்கிறேன்.
திரைப்படம் என்பது எல்லோரையும் பொறுத்த அளவில் முதலில் ஒரு பொழுது போக்கு அம்சமாகவே அறிமுகமாகிறது. கூத்தும் ,நாடகங்களையும் பார்த்த கண்களுக்கு முதலில் பிடிக்கும் அம்சமாவது பாடலும் எடுத்துக்கொண்ட கதை அமைப்பும்தான்.நடிப்பு கூட பிறகுதான், கா ட்சி அமைப்பு ,அரங்க நிர்மாணம் என்பதெல்லாமும் அவ்வழியே. வேடிக்கையான உண்மை யாதென்றால் ரசிகர் மனதில் நீண்டநாள் வியாபித்திருக்கக் கூடிய ரசனை பாடல்,கதை சம்பந்தமானதே. காரணம் , மற்றவை எல்லாம் அடுத்தடுத்து வரும் காலங்களில் மாற்றங்கள் நிறைய கொண்டு வருவதும் போவதுமான நிலையற்ற தன்மையைக் கொண்டது. பாடல் என்பது அப்படி அல்ல.ராக பாவங்களுடன் சொல்லும் ,பொருளும் கொண்டிருக்குமாயின் காலம் வென்று தலைமுறைக்கும் எதிரொலித்துக் கொண்டிருப்பது இன்றும் கண்கூடு. கதை நேர்த்தியாக சொல்வதோடு முடிவுரை ஆணி அடித்தாற்போல் ,பிறிதொரு முடிவு சொல்லி வருவதற்கான இடம் இல்லாது போகும்பொழுது பார்த்தவர் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமாகிவிடும்.
பாசமலர்
இளம் பிராயத்தில் ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கிய படம். சிறுவயதில் அண்ணனும் தங்கையும் எப்படியெல்லாம் சிரமப்பட்டு தாய் தகப்பன் இல்லாது
வாழ்ந்து மேன்மையுருகிறார்கள் என்று முற்பகுதி சொல்லும் . இருவரும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட புதிய உறவுகளின் கெடுபிடியால் தடுமாறி பிரிகிறார்கள். அப்படிப்பட்ட உறவுகளின் மத்தியிலும் அவர்களிடை மலர்ந்திருந்த பாச மலர் வாசம் இழந்து விடவில்லை. அவர்தம் மறைவில் கம்பீரமாகவே அனைவர் மனதிலும் வாசம் புரிய ஆரம்பித்து விடுகிறது என்று சொன்னால் மிகை இல்லை.
நடித்தவர்கள்: சிவாஜி ,சாவித்திரி
மறந்துவிடாத பாடல் : 1 . மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்......
2. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல......
சிறப்பான பாடல்கள் : வாராயோ தோழி
வாராயோ....
இது இன்றும் கிராமப்புறதிருமண வைபவங்களில் ஒலிக்கும் பாடல்.
பாட்டன்று கேட்டேன்பரவசமானேன்....
மயங்குகிறாள் ஒரு மாது...
இரண்டு பாடல்களும் நடை அழகு மிளிர்ந்தவை.
பாட்டன்று கேட்டேன்பரவசமானேன்....
மயங்குகிறாள் ஒரு மாது...
இரண்டு பாடல்களும் நடை அழகு மிளிர்ந்தவை.

No comments:
Post a Comment