Search This Blog

Friday, November 25, 2011

ஆலயமணி


    ஆலயமணி திரைப்படம் கதை வலு கொண்ட படம்.இரு கோணங்களில் கதை
நகரும். சிறு வயதில் தனது அகம்பாவத்தினால் ஏற்பட்ட பெரிய இழப்பு அவ்வப்போழது தாக்கி வரும் வேதனை ஒரு பக்கம். தன நேசிக்கும் ஒருத்தி தனக்கு கிடைத்தது தனது நண்பன் விட்டுக்கொடுத்ததால் என்றறியும் துடிப்பு இன்னொரு பக்கம்...சிவாஜி அருமையான நடிப்பு.சரோஜாதேவி அமரிக்கையாக வருவார்.எஸ்.எஸ்.ஆர் காதலில் துடுக்குத்தனம் சிவாஜியின் மனைவியாக அமைதியான தோற்றம் இரண்டு வேறுபட்ட தோற்றத்தில்                                              

 வெளுத்து வாங்கியிருப்பார். எஸ்.எஸ்.ஆர் ஒரு உண்மை நண்பனாய் விட்டுக்கொடுத்து ஒருதலை காதலில் வரும் விஜயகுமாரியை பண்புடன் ஏற்கும் பாங்கான நடிப்பு,இப்படம் வெற்றி அடைந்தது. பி .எஸ்.வீரப்பா தயாரித்த படம்.
கண்ணதாசன் பாடல் ..... பாத்திரத்தின்  தன்மை அறிந்து எழுதிய 'சட்டி சுட்டதடா ,கை விட்டதடா'... வெகுவாக அந்நாளில் சிலாகித்து பேசப்பட்டது.விசுவநாதன் இசையில் அனைத்துமே இனிமை.



முக்கிய பாடல் :          பொன்னை விரும்பும் பூமியிலே ....

                                           மானாட்டம் தங்க மயிலாட்டம் ...

                                            கல்லெல்லாம் மணிக்க கல்லாகுமா..[இதில் ஈஸ்வரி முதல் முறையாக ஹம்மிங் செய்தது.]

                                           சட்டி சுட்டதடா கை விட்டதடா   ..  [இந்த வரி பட்டினத்தார் பாடலில் எடுத்தாண்டது என்பது கண்ணதாசன் கூற்று.]










கோதைதனபாலன் .




No comments:

Post a Comment