Search This Blog

Tuesday, January 31, 2012

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

 Nagesh at his old age.  
இன்று, நம் தமிழ் திரை படத்துறையில் நகைச்சுவையில் செங்கோலோச்சிய நாகேஷ் நினைவு தினம்.அவர்தம் இனிய நினைவுகளின் வெளிப்பாடு எழுதச் சுகமானது. ஸ்ரீதர் அவர்களால் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர். தனது நடிப்பை முழுக்க சார்ளிசாப்ளின், லாஇரல் ஹார்டியை தழுவி தமிழுக்கேற்ற புதிய பரிமாணத்தில் மெருகேற்றி கொடுத்தவர். காதலிக்க நேரமில்லை படத்தில்.. மலரென்ற முகமொன்று.. பாட்டில் இவர் நடனம் ரசிக்கத்தக்கது... செல்லப்பா என்று அறிமுகம் செய்து கொண்டு. பாலையாவிடம் கதை சொல்லும் நேர்த்தி மறக்க முடியுமா..? திருவிளையாடல் தருமி இன்றும் இந்த கம்ப்யூட்டர்...உலகில் பல பரிமானங்க்ளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுபவி ராஜா அனுபவியில் ,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று சாடும் அழகே தனி. பாலசந்தரின் சர்வர் சுந்தரத்தில் ஒரு கதா நாயக அந்தஸ்தையும் திறம்பட செய்தவர். இவர் அழுதால் யாருக்கும் பிடிக்காது.. நீர்குமிழி படம் சான்று.
எம்.ஜி.ஆர்.க்கும் இவருக்கும் ஒத்து வராத நிலையிலும் தன் நிலையில் வென்று நின்றவர். எதிர் நீச்சல் போட்டவராயிற்றே..! நவக்கிரகம்,பாமா விஜயம் இன்னும் எல்லாம் இவருக்கு அனுக்கிரகமே. சமீபகால காலப் படங்களில் தந்தை வேடமேற்று நடித்தார். நடிப்பில்அழுவதைப் போல் வில்லத்தனத்தையும் இவரிடம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.. நகைச்சுவை நடிகனாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. இவர் நினைவுக்கு நகைச்சுவை நடிகை மனோரமாவுடன்..
http://www.youtube.com/watch?v=PdyX7rr9-68


கோதைதனபாலன்

No comments:

Post a Comment