Search This Blog

Saturday, September 19, 2020

#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் .

 என்னையு  மறியாமல் , ஏனென்றும் புரியாமல் பலமுறை பார்க்கவைத்த திரைப்படங்கள் மூன்று , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , உலகம் சுற்றும் வாலிபன் ,

திருவிளையாடல் ..  //      ஐந்துமுறை அடுத்தடுத்து விரும்பிப் பார்த்தேன் . இன்றைக்கு எழுதச்  சொன்னால் புராணங்களுக்கு நல்ல விளக்கம் , நல்ல நடிப்பு ,பாடல்கள் அருமை என்ற ரீதியில் சொல்லிச்செல்லலாம் . ஆனால் விமரிசிக்க இயலாத பருவத்தில் என் மனம் அதில் உள்வாங்கியது எதெதை என்று யோசித்து பார்க்கிறேன் .

 வண்ணப் படம் ஆரம்பக் காட்சி மிகவும் அழகு .  சம்போ மகா தேவா ...நந்தி , பூத கணங்களுடன். பாடல் காட்சி  மனதைத்தொட்டது .என்னைக் கவர்ந்த ஒன்று .

கே. பி. சுந்தராம்பாள் ...காட்சிகள் முதன்மையாக எனது இதயத்தை தொட்டன . கனி சம்பந்த வசனங்களும் ,  பழம் நீயப்பா ... பாடல்களும் ...நான் தலையசைத்து ரசித்தேன் .  '  ஆறுவது சினம் , கூறுவது தமிழ் ..." வரிகளில் ஒரு ஆளுமையை காட்சிக்கேற்ப அழகுற அமைந்தது கண்டு ரசித்தேன் .  நக்கீரன் , தருமி வசனம் , சிவ பெருமான் தருமி ..காட்சிகள் இன்றைக்கும் தனி சிறப்பு . எ.பி. நாகராஜன்  நக்கீரன் நடிப்பில் ஒரு அமைதியான கம்பீரம் கண்டேன் .  இறுதியில் சிவாஜி ..பாலையா  ...காட்சி என்னை மிகவும்  ரசிக்க  வைத்த ஒன்று . 

பாட்டும் நானே ...பாவமும் நானே ... பாடல் அனைத்திற்கும் முத்தாய்ப்பு ஆனது . அத்தனை பாடல்களும் அருமை கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .  டி.எம்.எஸ். , சுசீலாம்மா , ஜானகியம்மா , சீர்காழி கோவிந்தராஜன் , டி ஆர். மகாலிங்கம் , பாலமுரளி கிருஷ்ணா , பி.பி. ஸ்ரீனிவாஸ் ...அத்தனைபேரும் கே பி எஸ் பாடல்களுடான் பவனி வந்தது ...ஒரு அருமையான உணர்வைத் தந்தது என்றும் சொல்லலாம் .

ஒரு சின்ன நெருடல் இந்தப் படத்தில் எனக்கு உண்டு . ஓஎகே தேவர் ...சாவித்திரி , சிவாஜி சம்பந்தப் பட்ட காட்சி . யாகத்திற்கு அழைப்பில்லை .. என்ற பிரச்னை . அதில்   

.கணவன் பேச்சை மீறி தகப்பன் வீடு சென்றதால் பார்வதிக்கு கிடைத்த தண்டனை ... என்று முடிவெடுத்து பேசும் வசனம் ...இன்றைக்கும் சரியானது அல்ல என்றே  எண்ணத் தோன்றுகிறது . ஆணாதிக்க சிந்தனை அவ்வளவே . மற்றபடி  சிவாஜியின் திருவிளையாடல் ..திரைத்துறையில் முதன்மையாக என்னை பாதித்த படம் .

தில்லானா மோகனாம்பாள் ...//     சமூகக் கதை . கலைகளின் வழி ...தமிழருக்கே உரிய நாதஸ்வரம் , பரத நாட்டியம் ..கலைஞர்களிடம் மெலிதாக இழையோடிய காதல் கதை . பத்மினி அவர்களின் நாட்டியம் , சுசீலாம்மாவின் பாடல்கள்  என்னை திரும்பவும் பார்க்க .வைத்தன  இரண்டுமுறை விரும்பி சென்று பார்த்தேன் . சிவாஜி , பாலையா, பத்மினி ...ரயில் வண்டி காட்சிகள் ,  நம்பியார் மாளிகையில் நாயனா வாசிப்பு , நாகேஷின் நயமான வில்லத்தனம் ..தனி சிறப்பாக மனோரமா ..ஜில் ஜில் ராணி ...டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ....ஈஸ்வரி அம்மா குரலில் .. குரலில் பாடி ஆடி நடித்தது .. நல்ல ரசனை .  புதுமையை நோக்கி நகர்ந்த காலத்தில் பழமையைப் பாராட்டி வெற்றி கண்டா படம் . கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .

உலகம் சுற்றும் வாலிபன் .. //         மூன்று முறை அடுத்தடுத்து பார்த்தேன் .  ஒரு உண்மை எனக்கு புரட்சி நடிகர்  கதையில் ... எப்போதுமே எதையும் வென்றெடுக்கும் குணம் பரவலாக இருப்பதை ரசிப்பேன் . அது இந்தப் படத்தோடு முடிந்தது . இதன்  பிறகு அவ்வளவாக நான் ரசிக்கவில்லை .  அன்றைக்கு இந்திப் படங்களுக்கு மட்டுமே  வ ண்ணப் படங்கள் , மற்றும் வெளிநாடுகளில் எடுக்கும் அனுமதி எளிதாக கிடைத்த வேளையில் , தமிழ் படங்களில் ஒரு தேக்க நிலை உருவாயிற்று . அது இசையிலும் பாதித்தது . இந்த சூழ்நிலையில் எம்.ஜி. ஆர்.  அவர்கள் நல்ல செலவில் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்தார் .  இரண்டு வேடங்களில்  அவருக் . கேற்ற கதையில் ஜனரஞ்சகமாக எடுத்திருந்தார் . ஜப்பானில் நடை  பெற்ற  உலக சந்தையை ..." உலகம் .. உலகம் .' பாடலில் அழகுற காண்பித்திருப்பார் .

தாய்லாந்து நடிகை ஒருவர் நடித்திருப்பார் . அவரது கொஞ்சும் தமிழ் என்னை வியக்கவைத்தது . வித்தியாசமான அவர் பங்களிப்பு மனம் கவர்ந்த ஒன்று . " பச்சைக்கிளி ...முத்துச்சரம் ..முல்லைக்கொடி யாரோ .."  பாடலில் அந்த ஊர் இசையும்  பயின்று வந்திருக்கும் . இவ்வளவு செலவிற்கும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில்  அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்து  பெரும் வெற்றியைத் தந்தன என்றால் அது மிகை இல்லை .

 இதற்குமுன் இத்யாதி சங்கதிகளை இந்தப்பெற்று இந்திப் படங்களே முன்னணியில் நின்று மக்களைக் கவர்ந்த நிலையில் , வடஇந்திய பெரும் கலைஞர்களும் இதில் கையாண்ட தொழில் நுட்ப படப்பிடிப்புகளை பாராட்டி வியந்து சென்றனர் .  இது எம் ஜி ஆர்    தமிழ்த் திரைக்கு ஒரு விளம்பர அளவில் அளித்த பெரிய  பங்களிப்பு என்றே சொல்லலாம் .

அன்றைய உணர்வுகள் அப்படியே இங்கே .

கோதை தனபாலன்




No comments:

Post a Comment