Search This Blog

Saturday, September 19, 2020

#அன்றுமனதைப்பாதித்த சில திரைப்படங்கள் .

 அவள் ஒரு தொடர்கதை ..

நன்கு  திரைக் கதைகளை அலசிப் பார்க்கும் ஒரு பக்குவம்  என்னுள் வளர்ந்திருந்ததை  சில படங்களால் தெளிவுற அறிந்துகொண்டேன் .  அதுவரை பொழுதுபோக்க திரைக்கதைகள் , பாடல்கள் என்றே இருந்த எனக்கு , சமூகச் சாடலில் ஒரு அங்கமாக  , கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்  வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை  திரைப்படம் ..பெண்மையின் மேன்மையை உரசிப் பார்க்கும் ஒரு  புதிய வெளிச்சத்தை  பார்க்கும் மக்களிடம் உருவாக்கியது . ஒவ்வொரு வசனமும் மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது . வீட்டிற்கு வந்து பல நாட்களாக என் மனம் இது பெண்மைக்கே வந்த சாபமோ என்று தோன்றியது . காரணம் அதை நடைமுறை வாழ்க்கையில்  நானறிந்த பெண் மருத்துவர்கள் வாழ்வில் கண்டுள்ளேன் . எவ்வளவு உண்மை 

தலைமகள்  சுஜாதா தனது சம்பாத்தியத்தில் அன்னான் தங்கைகள் , தாய் தந்தையரை பராமரிக்கிறார். பொறுப்பற்ற அன்னான் குடிகாரன் .    மனம் அதிர்ந்து போனேன் ..எவ்வளவு பெரிய உண்மையை துணிந்து சொல்லியும் பலனில்லை . காதலித்தவனையும் கைபிடிக்காது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறாள் . தனக்கென்று ஒரு மாப்பிள்ளை வர   இன்னொரு தங்கைக்கு முடித்து வைத்து , அண்ணனை பறிகொடுத்து , திருமணமான இன்னொரு தங்கை விதவைக்கு கோலம் ...திரும்பவும் இவள் வேலை , கடமையாக தொடர்கிறது .

பொறுப்பற்ற  பத்தாம் பசலித்தனமான பெற்றோரை நன்கு அடையாளம் காட்டியது .  கவியரசரின் பாடல் ..தெய்வம் தந்த வீடு ...  ஒவ்வொரு வரியும் இன்றைக்கும் நான் வியந்து ரசிப்பேன் ..  " ... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ....."

உதிரிப் பூக்கள் .

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் கைவண்ணம் . பொருத்தமான நடிகை அஸ்வினி .  நல்ல பாங்கான தோற்றம் . அமைதியான பெண் . புரிந்து கொள்ளாத கணவன் . இல்வாழ்க்கை அர்த்தமே புரியாத கணவன் . அன்பிற்கு  ஏங்கும் மனம்  , குழந்தைகள் மீதே அதீத பாசம் .... ஆக  மகிழ்ச்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாத கொடுமையான  வாழ்க்கை . முகபாவத்திலேயே  படம் முழுக்க நம்மை கவர்ந்திடுவார் . அடிப்படையில் பெண் மனது பற்றி அறியாமலே  தந்தை முடிவெடுத்து திருமணம் நடத்தி வைத்ததால் வேனும் யதார்த்த கெடுதலான விளைவுகள் ...ஊரறிய மெதுவாக அரங்கேறும் . இறுதியில் பஞ்சாயத்தார் கணவனான விஜயனையே ...தனக்கே  தண்டனையைத் தெரிந்தெடுக்க , திருந்தாத ஆணாதிக்க மனா நிலையில் நீரில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார் .  நம் மனதில் ஒரு கேள்வி ... வாழும் பெண் இப்படி விரும்பமாட்டாள் .... ஆனால் சமூகத்தில் சில விதிகள் இவ்வாறு விதிக்கப் படுகிறது .  

'' >>  அழகிய கண்ணே ! உறவுகள் நீயே .....'   இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் ... என் மனம் அழும் .

அழகி ...

எனது  பிந்திய நாட்களில் நான்  வியந்து ரசித்த ஒரு திரைப் படம் . மெலிதான  இளம் பிராய  காதல்  வெகு இயல்பாக ...   பார்த்திபன் காண்பித்திருப்பார் .   பின்னால் ஏழைக்  காதலன் வசதியு  டையவனாகிறான் ... வேறொருத்தியை மணந்து வாழ்கிறான் ....  சீமான் மகளோ  இன்னொருவனை மணந்து ஏழ்மை நிலைகுத்தி தள்ளப் பட்ட நிலையில் ...குழந்தைகள்   , வியாதி பீடித்த கணவன் இவர்களுடன் அபலையாக ..இவனை சந்திக்க .. அவளுக்கு இவன் நல்ல நிலைமை மகிழ்வைத் தருகிறது . அவனுக்கோ மனதில் ஒரு பூகம்பம் இவள் நிலை கண்டு . மெலிதான    அரும்பிய நிலையிலேயே விலகிய காதலுணர்வுகள்  மறுபடியும் மனங்களில்  வலுவில்லாத  நூலிழைகளாக தோன்ற அவர்களின் நல்வாழ்விற்கு இவன் கவனம் எடுத்து உதவுகிறான் . பார்த்திபன் நாயகனாக தேவயானி உண்மை அறிந்த மனைவியாக ..வங்க நடிகை   நந்திதா ..? அமைதியான முகவெட்டு அற்புதமாக நடித்திருப்பார் .மாணவப் பருவத்தில் படித்தவர்களும் அருமை .

விளம்பரம் அதிகம் இல்லாமலே   அதிக நாட்கள்  ஓடியது . வேறொருவர் சொல்லி இதை பார்த்தேன் ...இப்படி ஒரு கதையை திரைப்படமாகி வெற்றியும் கண்டா




பார்த்திபனை எண்ணி வியந்தேன் .

"...... ஒளியிலே தெரிவது ...',  " பாட்டுச் சொல்லி ....'  பாடல்கள் இன்னும் ஒரு புதுமையான ரசனையில் என் மனம் ரசிக்கும் .

kothaidhanabalan
(செம்மொழியாள்  )  .

No comments:

Post a Comment