Search This Blog

Wednesday, January 25, 2012

கண்ணணோடு கண்ணதாசன்

  கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார்.

பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன்

நடுவினிலே......' ..பாடலை பாரதியார் எழுதியது என்று மாற்றி

நினைத்தவரும் உண்டு. 'காவிரிகரையின் ஓ
ரத்திலே கானம்


வந்தது,கானம் வந்த வழியினிலே கண்ணன் வந்தான் தோழியரே..''

என்று ஜஸ்டிசு விசுவநாதனில்  சொல்லியிருப்பார்.

 

  'ராதைக்கேற்ற கண்ணனோ , சீதைக்கேற்ற ராமனோ ,

கோதைக்கேற்ற  கோவலன் யாரோ..' என்று 'சுமைதாங்கியில் 

 கூறி வைப்பார் . பின் பச்சை விளக்கில்  மணப்பெண்ணின் நாணத்தை

விளக்குகையில் ...'ஒன்று சொல்ல நினைத்தால் அந்த பொல்லாத

கண்ணனின் ராதை, நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்

கொண்டாள் அந்த புல்லாங் குழல் மொழிக் கோதை .. ' என்று

இருவரையுமே கண்ணனோடு இணைத்து பாடியவர்..'மல்லிகை

முல்லை... என்று துவங்கும் சிவாஜி பாடலில் ...' கோதை ஆண்டாள்

தமிழை ஆண்டாள் என்று கண்ணனின் தெய்வத் தன்மையோடு பாடி

விடுவார். நானும் ஒரு பெண் திரையில்..'கண்ணா கருமை நிறக்

கண்ணா ..என்றழைத்து கருமை நிறக் குறையினால் படும் பாட்டிற்கு

விளக்கம் கேட்பார். 'கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.... குழல்

எடுப்பான் பாட்டிசைப்பான் ,வலம்புரி சங்கெடுத்து

பாலுட்டுவான் ...'பாட்டில் வரும் அழகுற கற்பனையை என்ன

சொல்ல ,! பஞ்சவர்ணகிளியில் ! மனதில் இந்த சந்தோஷங்கள்

அனுபவித்து கீதை கண்ணனையும் பாடுவார். ..தர்மம் என்னும்

தேரிலேறி கண்ணன் வந்தான் , தாளாத துயர் தீர்க்க கண்ணன்

வந்தான் ..என்று ராமுவில் சொல்லி , கர்ணனில் .'... மன்னித்து

அருள்வாயடா.. என்று இறங்கி 'வஞ்சகன் கண்ணனடா நானும் உன்

பழி கொண்டேனடா ...' என்ற இயலாமையை தன மனம் வருந்தவும்,

யாரும் போற்றும்படியாகவும் இவரால்தான் அத்தகைய வரிகளை

புனைய முடிந்தது. தெய்வமகனில் ,'கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா.. என்று உருகிவிட்டு ,' கௌ ரவம் படத்தில் 'நீயும் நானுமா

கண்ணா என்று ஆரம் பித்து .. நாளைய பாரதம் யாரதன்

காரணம் ..என்று அதட்டி கேட்கும் பாங்கு இவரிடத்தில் மட்டுமே.ஆக

’கண்ணனை நினைக்காத நாளிலையே ‘ ..என்பவரும் இவரே...



http://www.youtube.com/watch?v=svefvX9hPm8



கோதைதனபாலன்


 கண்ணன் வருவான்.. வாலி எழுதியது.

5 comments:

  1. விட்டுப்போன கண்ணன் பாட்டு இருக்கிறதா என்று யோசிப்பதில் இன்றைய என் தூக்கம் அம்பேல்

    ReplyDelete
  2. கண்ணதாசனை மிஞ்ச இனி ஒருவர் பிறந்துதான் வரனும்.

    ReplyDelete
  3. goma, அவர்களுக்கு நன்றி.இப்படி நீங்கள் யோசித்தால் எந்த நாளும் தூக்கம் அம்பேல் தான்.

    அன்புடன்,
    கோதைதனபாலன்.

    ReplyDelete
  4. goma, அவர்களுக்கு நன்றி. இப்படி நீங்கள் யோசித்தால் எந்த நாளும் தூக்கம் அம்பேல் தான்.

    அன்புடன்,
    கோதைதனபாலன்.

    ReplyDelete
  5. Lakshmi..அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை.


    அன்புடன்,
    கோதைதனபாலன்.

    ReplyDelete