தங்கக் கிளியே மொழி பேசு....சர்க்கரை இதழால் கவி பாடு...
வெற்றி கண்டு திரும்பும் வீரன் ஜெமினி ஆசையுடன் திரும்பி காதலி அஞ்சலி தேவியுடன்....குதிரை மீதமர்ந்து பயணிக்க ...அந்தக் குதிரையின் குளம் பொலியி லிருந்தே நாதம் பிறக்கிறது...நம்மை ஈர்க்கிறது...
அவனோ,
வேலில் வடித்த கண்ணாலே.....
பாலில் பிழிந்த சொல்லாலே ....தங்கக் கிளியே மொழி பேசு என்கிறான்...
இவளோ...
சிங்கத் தமிழன் மார்பினிலே சிரித்து மயிலே விளையாடு.....
அனைக்கும் காதல் கைகளிலே ...
அன்னக் கொடி போல் விளையாடு...
படைகளை வென்ற தோள்களிலே பறவைகள் போல் இசை பாடு...
இது சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் கலந்த நிலை கொண்டே பெரும்பாலும் காதல் சம்பந்தப் பட்ட பாடல்கள் பேசப்பட்டுள்ளன. இன்றுபோல்...பணம் ஈட்டுவதை வைத்து அல்ல.. அந்த உணர்வுகள் அப்படியே இப்பாடலில் ஜெமினிக்கான கம்பீரத்திலும் ஒரு பதமாக சீர்காழியார் குரலிலும், அஞ்சலி தேவியின் கவின்மிகு தோற்றத்தில் ஒரு விவேகம் தவறாத பெருமையென சுசீலாம்மாவின் இனிய குரலில்.... வீரக் கனலில்....பாடல் ....நம் மனதையும் சேர்த்து கொள்ளை கொள்ளட்டுமே.
KOTHAIDHANABALAN
No comments:
Post a Comment