ஒரு சிறிய ,அறியாத வயதில் நம்மில் எப்படி பட்ட குணங்கள் வெளிப்படுகின்றன என்ற ஒரு உண்மையை எனக்கு உணர்த்திய படம். இரு குடும்ப நண்பர்கள் பற்றி தொடங்கி ...அந்த ஒருவனுக்கு உண்மையை வாழ்க்கை முறையில் உணர்த்தும் படம். இதில் சிவாஜி ஒரு அகங்கார திமிர் பிடித்த தனவந்தராய் அறிமுகமாவார். தன்பிள்ளை , கொடுத்த அதிரசத்தை ருசித்து அருமை என்றவர் அது ஒரு ஏழை தொழிலாளி வீட்டில் செய்தது என்று அறிந்ததும் தன வாயை கழுவுவார்....மனம் நொந்தது.இப்படியும் உண்டோ என்று. சக நண்பன் பொருள் யாவும் தொலைத்து நிற்கையில் அவமதிப்பர்......இப்படியும் வாழும் வகை உண்டோ என்று என் சிறிய மனது அதிர்ந்து போனது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. பின்னர் கதை அவர் பாசத்துடன் வளர்த்த பிள்ளையே வேறு ஒருவர் பெற்ற பிள்ளை என்று அறியும் போது .....மனம் துடித்து .,மாறுகின்ற நிலை உணர்த்துவதாய் இருக்கும்
மற்றையவை; என்னை தொட்டு சென்றன கண்கள் .........
பார் மகளே பார் ,நீ இல்லாத மாளிகையை...
அவள் பறந்துபோனாளே ........
மதுரா நகரில் தமிழ்சங்கம் .....
பாடல்கள் அனைத்துமே இனிமை அருமை. அவற்றில் குறிப்பாக இந்த இரு பாடல்களும் நம் மனதைவிட்டு என்றும் அகலாதவை "பார் மகளே பார் ,நீ இல்லாத மாளிகையை... '' மற்றும் '' அவள் பறந்துபோனாளே ........ ''
ReplyDelete